ஹலால் யூகங்களும், விடைகளும்

அஷ்-ஷைக் ரீ.ஹைதர் அலி அல்-ஹலீமி
முன்னாள் ஹலால் பிரிவு உறுப்பினர் - அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா தமது ஹலால் அத்தாட்சிப்படுத்தல் பிரிவை தொடர்ந்தும் தமக்குக் கீழே வைத்திருக்கவே படிப்படியாக தமது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டே இருந்தது. ஆனாலும் இதனைக் காரணம் காட்டி குறிப்பிட்ட பேரினவாத அமைப்பு முஸ்லிம்கள் மத்தியில் தொடர்ந்தும் குழப்பங்களை விளைவித்து வந்ததனால் தான் இறுதியில் அதனை தமது நிருவாகத்தின் கீழிருந்து விலக்கிக்கொள்ள ஜம்இய்யா முடிவு செய்தது. இவ்வாறு திடீரென ஹலால் அத்தாட்சிப்படுத்தலை விலக்கிக் கொண்டதால் மக்கள் மத்தியில் பல சந்தேகங்களும், குழப்பங்களும் ஏற்பட்டுள்ளன. தொடர்ந்தும் (ஹலால் நுகர்வோர்கள், வாடிக்கையாளர்களான) முஸ்லிம்கள் எவ்வாறு தமது அன்றாட வாழ்வில் ஹலாலைப் பேண முடியும்? எனவும், ஜம்இய்யா முழுமையாக விலகிக் கொண்டதால் தற்போது பொறுப்பேற்றுள்ள குறிப்பிட்ட கம்பனியை எவ்வாறு நம்புவது? போன்ற இன்னும் பல கேள்விகளுக்கு சில தெளிவுகளும், விடைகளும் இக்கட்டுரையினூடாக கிடைக்குமென நினைக்கிறேன்.

விலக்கிக் கொண்டது தவறானதா?
முதன்முதலாக இதற்கான விடை காணப்பட வேண்டும். ஒரே வார்த்தையில் கூறுவதாக இருந்தால் இன்றல்ல இது எப்போழுதோ வேறொரு நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டிருக்க வேண்டும். இதற்கான பல காரணங்களை இங்கு குறிப்பிடலாம்.

1. ஹலால் என்பது ஒரு மார்க்கக் கடமை என்பதற்கு அப்பால் இன்று உலக சந்தையில் நுகர்வுப் பொருட்களில் ஹலால் ஒரு மிகப்பெரிய வியாபாரமாக (ர்யடயயட ஆயசமநவiபெ) மாறி வருகிறது. விஷேடமாக ஐரோப்பிய நாடுகளில் இதன் கேள்விகள் அதிகரித்து வருகின்றன. சென்ற மாத இறுதியில் கிடைத்த ஒரு தகவலின் படி ரஷ்யாவில் ஹலால் உணவின் தேவைப்பாடு அதிகரித்து வருவதன் நிமித்தம், அங்கே ஹலால் தொழில் துறைகள் அதிகரித்து வருவதால் ஹலால் சந்தை ஒரு ஒளிமயமான எதிகாலத்தை நோக்கி நகர்வதாக தெரிவிக்கப் படுகிறது. அவ்வாறு உற்பத்தி செய்யப் படும் ஹலால் பொருட்களை முறையாக பகுப்பாய்வு செய்து, அதற்கு ஹலால் சான்றிதழ் வழங்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதால் அதிகளவிலான முஸ்லிம்கள் முன்னின்று அதற்கு ஹலால் தரச் சான்றிதழ் வழங்கும் சேவையை மேற்கொண்டு வருவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. ரஷ்யாவில் ஹலால் தொழில் துறைகள் பாரிய அளவில் அபிவிருத்தி அடைந்து வருகிறது. ஆண்டு தோறும் நாம் 40 க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகளுக்கு, வௌ;வேறு கோணங்களில் ஹலால் சான்றிதழ் வழங்கி வருகிறோம் என ரஷ்யா பத்வா சபையின் கீழ் இயங்கும் பொருளாதார துறை இயக்குனர் மதீனா கலீமுல்லாஹ் கலீஜ் டைம்சுக்கு வழங்கிய பேட்டி ஒன்றில் குறிப்பிட்டார். இங்கு ரஷ்யாவைக் குறிப்பிட்ட நோக்கம் முஸ்லிம்கள் அதிகமில்லாத ஒரு நாட்டில் ஹலால் நுகர்வோரின் தேவையை எடுத்துக்காட்டுதலுக்காகும்.

எனவே மார்க்கம் என்பதற்கு அப்பால் வியாபாரம், (ஆயசமநவiபெ), பணம், என்று வரும் போது அதனோடு ஒரு பெரிய இஸ்லாமிய நிறுவனம் நேரடியாக தொடர்புபடுவது (வேறு நாடுகளுக்குப் பொருத்தமானதாக இருந்தாலும்) இலங்கை போன்ற ஒரு நாட்டுக்கு பொருந்தாது என நம்புகிறேன். இதனால் உலமாக்கள் மீதுள்ள நம்பிக்கைகள் குறைந்து, வீணான சந்தேகங்கள் முஸ்லிம்களுக்கு மத்தியிலே உருவாகும்.

2. இலங்கை போன்ற ஒரு நாட்டில் முஸ்லிம் அல்லாதவர்கள் ஹலாலை இன்னும் ஒரு மார்க்கக் கடமையாகத் தான் எண்ணியிருக்கிறார்களே தவிர இது சுகாதாரத்தோடு சம்மந்தப்பட்ட ஒரு விவகாரம் என்றோ அல்லது உலக அளவில் இது உபயோகப்படுத்தப்படுகிறது என்றோ அறியாமல் இருக்கிறார்கள். இதனை ஜம்இய்யா போன்ற ஒரு (நூறு வீத) இஸ்லாமிய நிறுவனம் வழங்கும் போது பிழையான அர்த்தங்கள் அங்கு கற்பிக்கப்படுகின்றன. இஸ்லாமிய பெயரில்லாத ஒரு நிறுவனம் இதனை வழங்க முற்படும் போது இதனை ஒரு வியாபார நோக்கோடு பிரமக்கள் பார்க்க ஆரம்பிப்பர். இதன் போது பிழையான பார்வைகளிலிருந்து மக்கள் விடுபடுவர்.

3. குறிப்பிட்ட பேரினவாத அமைப்பின் ஹலாலுக்கு எதிரான போராட்டத்தின் நோக்கமே இது ஜம்இய்யத்துல் உலமாவின் கீழிருந்து அகற்றப்பட வேண்டும் என்பதே. காரணம் எங்கு பாhத்;தாலும் ஜம்இய்யாவின் பெயர், மற்றுமன்றி இதனால் பெறப்படுகின்ற பணம் (இஸ்லாமிய) பயங்கரவாத(?) அமைப்புகளுக்கு அனுப்பப்படுகிறது என சந்தேகிக்கப்பட்டதேயாகும். ஆனால் இதன் பொறுப்பு ஜம்இய்யாவின் கீழிலிருந்து விலக்கப்பட்டதையடுத்து அவர்கள் இதுதொடர்பாக எதுவும் மறுப்புக் கூறவில்லை. மட்டுமல்லாது அவர்களின் இதுபற்றிய மௌனம் தமது எதிர்பார்ப்பு நிறைவேற்றப்பட்டதாகவே விளங்குகிறது.

இதுவல்லாத இன்னும் பல காரணங்கள் இருந்த பேதிலும் குறிப்பிடப்பட்ட மூன்று முக்கிய காரணங்களும் இங்கு போதுமென நினைக்கிறேன். ஆகவே இதுவொரு பொதுவான நிறுவனமாக செயற்படுவதே சகலருக்கும் பொறுத்தமானதாகும்.

ஜம்இய்யா முழுமையாக நீங்கிக் கொண்டது?

இந்த வசனம் இலங்கை வாழ் முழு முஸ்லிம் மக்களையும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. இது தொடர்பாக சென்ற வார விடிவெள்ளிப் பத்திரிகைக்கு தற்போதைய ஹலால் சான்றுறுதிப் பேரவையின் (ர்யடயட யுஉஉசநனவையவழைn ஊழரnஉடை) பிரதம நிறைவேற்று அதிகாரி (ஊநுழு) அலி பதார் அலி அவர்கள் வழங்கிய பிரத்தியேக பேட்டியில் 'ஹலால் சான்றுறுதிப் பேரவை அ.இ.ஜ.உலமாவின் மேற்பார்வையின் கீழ் இயங்கும் ஒரு நிறுவனமா? என்று கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையில்:
'இல்லை இப்படி கூறப்படுவது முற்றிலும் தவறு. அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவுக்கும் ஹலால் சான்றுறுதிப் பேரவைக்கும் எவ்வித தொடர்பும் இல்லை' என்ற பதில் சரியானதாக இருந்தாலும் அதன் வெளிப்டையான கருத்து மக்களுக்கு மத்தியில் சந்தேகங்களை ஏற்படுத்தி இருந்தது. அதாவது உலமாக்களின் எவ்வித பங்களிப்பும் இல்லாதது போன்று நினைக்கத் தோன்றியது. அதனை கீழ்வருமாறே விளங்க வேண்டும்.

இதுவரை காலமும் சகல முகாமைத்துவ செயற்பாடுகளும் ஜம்இய்யாவின் தலைமையகத்தின் கீழும், அதன் கீழ் உற்பத்திகளுக்கான ஹலால் சான்றிதழ்களைப் வழங்க ஹலால் அத்தாட்சிப்படுத்தல் குழுவொன்றும்; இயங்கி வந்தது. இக்குழுவில் துறைசார்ந்தோரும், உலமாக்களுமாக இரண்டு சாராரும் செயற்பட்டு வந்தனர்.

இன்று மாற்றம் பெற்றிருப்பது இது தான்..
இன்று இப்பிரிவின் முகாமைத்துவம் மட்டுமே மாற்றப்பட்டு ஒரு குறிப்பிட்ட சாராரிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. ஏணைய செயற்பாடுகள் வழமை போலவே நடைபெறும். அவைகளில்; எவ்வித மாற்றங்களும் நடைபெற மாட்டாது. ஆனால் எதிர் காலத்தில் தற்போதைய நிலையை விட 'இன்ஷா அல்லாஹ்' மிக சிறப்பாக நடைபெறும் என எதிர்பார்கப்படுகிறது.

புதிய முகாமைத்துவம் யாரிடம்?

'இனிமேல் ஹலால் ஒரு கம்பனியாக செயற்படும் அல்லது ஒரு கம்பனியிடம் பொறுப்புக்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளன' என்றதுமே பொது மக்களின் சிந்தனையில் தப்பான சிந்தனைகள் தோன்ற ஆரம்பித்தன. கம்பனி என்பது வெறுமனே பொருளாதாரத்தை மடடுமே மையமாக வைத்து செயற்படுகின்ற ஒரு நிறுவனம். இனிமேல் அதன் தூய்மை இல்லாமல் போய் விடும். உலமாக்கள் இல்லாமல் இவர்கள் எவ்வாறு சான்றிதழ் வழங்குவார்கள்? என்பன போன்றவைகளே அந்த தப்பான சிந்தனை.

இதற்கு மாற்றமாக முன்பிருந்தது போலவே துறை சார்ந்த நிபுணர்கள், ஆலிம்கள், தொழிநுட்ப வல்லுனர்கள் என சகல தரப்பினரும் இந்த புதிய முகாமைத்துவத்திற்குள் அடங்குவர். அத்துடன் புதிய முகாமைத்துவ சபையில் நாட்டில் முன்னணியிலுள்ள (செல்வந்த) வியாபரிகள் உள்வாங்கப்பட்டுள்ளனர். இவர்கள் இந்தப் பொறுப்பை ஒரு பொதுப்பணி என்ற அடிப்படையிலேயே பெற்றுக்கொண்டுள்ளனர். இதன் மூலம் பெறப்படும் இலாபங்களிலிருந்து குறித்த ஹலால் கவுன்சிலின் மாதாந்த செலவுகள் போக மீதியை ஒரு பொது நிதியாகவோ அல்லது வேறுபல பொதுத் தேவைகளுக்காகவோ வைத்திருப்பார்களே தவிர முகாமைத்துவம் ஒருபோதும் அதனை பங்கு போட்டுக்கொள்ளவோ அல்லது பெற்றுக்கொள்ளவோ முயலாது என்பது தெளிவாகிறது.

புதிய ஹலால் சான்றுறுதிப் பேரவை (ர்யுஊ) க்கான எமது ஆலோசனைகள்:

பொது மக்களின் ஆதரவை உறுதிப்படுத்தவும், புதிய ஹலால் சபையின் நன்பகத் தன்மையைப் பாதுகாக்கவும் கீழ் வரும் விடயங்களை கவனத்தில் கொள்ளப்படத்தக்கவையாகும்.

1. பொது மக்களுக்கு ஆறுதல் அளிக்கும் வண்ணம் தமது கொள்கைகள், முகாமைத்துவ சபை, துறைசார்தோர் மற்றும் ஆலிம்களின் பெயர்கள் அடங்களாக முழுவிபரங்கள் அடங்கிய ஒரு ஒரு உத்தியோகபூர்வ கடிதம் நாடு பூராவிலுமுள்ள மஸ்ஜித்களுக்கு அனுப்பி வைக்கப்படல் வேண்டும்.
2. மிக அவசரமாக புதிய ஹலால் இலட்சினையுடன் சந்தைக்கு பொருட்கள் வருவதற்கான வேலைகள் துரிதப்படுத்தப்படல் வேண்டும்.

3. இணையதளம் (றநடிளவைந) மற்றும் ஒரு துரிதசேவை அழைப்பொன்றும் (ர்ழவடiநெ) மிக அவசரமாக அறிமுகப்படுத்தப்படல் வேண்டும்.
4. (தகுந்த காரணத்திற்காகவேண்டி) அ.இ.ஜ.உலமாவின் தலைமையகம் இல்லாதபோதும், அதன் கிளைகளோடு அல்லது அதனோடு தொடர்புள்ள ஆலிம்களோடு இணைந்தே பிராந்திய மட்டங்களில் தமது செயற்பாடுகளை அமைத்துக் கொள்வது சாலச்சிறந்தது. மாவட்ட ரீதியாக கிளைகளை அமைத்து அதனூடாக தமது செயற்பாடுகளை ஒருங்கிணைக்கலாம். இது பல அசௌகரியங்களிலிருந்து பாதுகாத்துக்கொள்வதற்கான வழியாகும்.

பொதுமக்கள் கவனத்திற்கு!

ஒரு நிர்பந்தமான சூழ்நிலையிலேயே அகில ஜம்இய்யத்துல் உலமா இதனை பிரிதொரு அமைப்பிடம் ஒப்படைத்தது. அத்துடன் ஒருபோதும் பொதுமக்கள் தடுமாற்றம் அடைகின்ற அளவோ அல்லது தவறான வழிகளில் சிக்கும் அளவுக்கோ ஜம்இய்யா நடந்து கொள்ளவில்லை. 'இன்ஷா அல்லாஹ்' இதன் பிறகும் அப்படி நடந்துகொள்ள மாட்டாது என்பதையும் நாம் உறுதியாக நம்புகிறோம்.

எனவே ஒப்படைக்கப்பட்டிருக்கும் முகாமைத்துவம் ஒருமுறைக்கு பலமுறைகள் சிந்தித்து ஆலோசனைகள் செய்யப்பட்டே வழங்கப்பட்டிருக்கிறது. அவர்களும் ஒரு சமூகப் பணிக்காகவே இதனை பொறுப்பேற்றுள்ளனர்.

எனவே முஸ்லிம்களின் மார்க்கக் கடமையான இந்த ஹலாலைப் பாதுகாக்கவும், இதன் தொடரான வளர்ச்சிக்காகவும் பள்ளிவாசல்கள், கதீப்மார்கள், ஆலிம்கள், துறைசார்ந்தவர்கள், கல்விமான்கள் மற்றும் நலன்விரும்பிகள் சகலரும் முன்வர வேண்டும்.

'எல்லாவற்றையும் அல்லாஹ்வே மிக அறிந்தவன்'

(இக்கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துக்கள் ஹலால் சான்றுறுதிப் பேரவை (ர்யுஊ) யின் கருத்துக்களைப் பிரதிபளிக்கத் தேவையில்லை)

2 comments:

Anonymous said...

shaikh some english word are converted in to unicode please ... for better understand the article

Anonymous said...

பேரினவாதிகள் விளைவித்த குழப்பத்தினால் ஒரு நிறுவனத்திற்கு இம்முறை கைமாற்றப்பட்டது....எனவே மேலும் அப்பேரினவாதிகள் இது சம்பந்தமாக தொல்லை தந்துகொண்டே இருந்ததால் தான் நாம் ஹாலால் சான்றிதல் விநியோக முறையை முழுமையாக கைவிட்டுவிட்டோம் என்று அந்நிறுவனம் கூறிவிடுமோ என்று பயமாக உள்ளது