இஸ்லாமிய புதுவருடமும், ஹிஜ்ரி பிறைக் கலண்டரும்

 

-அஷ்-ஷைக் ரீ.ஹைதர் அலி அல்-ஹலீமி-
தலைவர் - அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா - கம்பளைக் கிளை

உலகில் தோன்றிய அல்லது தோற்றுவிக்கப்பட்ட கலாசாரங்களில் தூய இஸ்லாத்தின் கலாச்சாரங்கள், பாரம்பரியங்கள் மாத்திரமே அறிவுபூர்வமானதும் நாகரீகமுடையதுமாகும். ஏனையவைகள் யாவும் வெறும் பண்டையகால புராணங்களும், அறிவுகள் ஏற்றுக்கொள்ள முடியாத தத்துவங்களுமாகும். அத்துடன் அவைகளில் அறியாமைகளும் மௌட்டீகங்களும் நிறையவே காணப்பட்டன.
இக்கருத்துக்களை உண்மைபடுத்தும் விதமாகவே இஸ்லாமிய காலண்டர் முறைகளும், ஆங்கிலம், கிரேக்கம், உரோம் போன்ற இன்னும் பல கலண்டர் முறைகளும் அமைந்திருக்கின்றன. இதனை வரலாறுகளைப் புரட்டிப் பார்க்கும் போது மிகத் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றன.


பண்டைய காலம் முதல் கலண்டர் கடிகாரங்கள் கண்டுபிடிப்பதற்கு முன்பிருந்தே மனிதர்களிடம் பல்வேறுபட்ட காலக் கணிப்பீட்டு முறைகள் இருந்து வந்திருக்கின்றன.

பண்டைய எகிப்திய மக்கள் நைல் நதியை அடிப்படையாக வைத்து கால மாற்றங்களைக் கணித்து வந்தனர். நைல் நதி பெருக்கெடுக்கும் காலம், வெள்ளம் வடியும் காலம்,வெள்ளம் வற்றும் காலம் எனக் கணிப்பிட்டனர். இப்படியான செயற்பாடுகள் தாம் பிற்காலத்தில் கலண்டர் கண்டுபிடிப்புக்குக் காரணமாக அமைந்தது. கலண்டரை முதல் முதலில் கண்டுபிடிப்hதற்குக் காரணமாக இருந்தவர்களும் எகிப்தியர்களே.

காலப் போக்கில் அறிவியலாளர்கள் இதனைச் சீர்செய்தனர். பூமி தன்னைத் தானே சுற்றி சூரியனையும் சுற்றி வருவதையும் கண்டு பிடித்து அவர்கள் இதனை ஒராண்டு என கணக்கிட்டனர். 

ஆண்டுதான் முதலில் தோன்றியது அதற்குப் பிறகுதான் மாதம், வாரம், நாள், மணி, நிமிடம் செக்கன் என்பன கணக்கிடப்பட்டன. வளர்பிறை தேய்பிறை என்பனவற்றை ஆதாரமாகக் கொண்டு ஒரு அமாவாசைக்கும் இன்னொரு அமiவாசைக்கும் இடைப்பட்ட காலத்தை மாதம் எனக் கணித்தனர். முப்பது நாட்கள் கொண்ட இக்கால கட்டத்தை மாதம் எனப் பெயரிட்டு தொடர்ந்தும் ஆராய்ந்தனர்.

வான்மண்டலத்திலுள்ள நட்சத்திரக் கூட்டங்களை மேடம், ரிஷபம், மிதுனம் என பன்னிரெண்டு ராசிகளாகப் பிரித்தனர். அந்த ஒவ்வொரு பிரிவிலும் சூரியன் தங்கும் நிலையை ஒரு மாதம் எனக் கணித்ததோடு அந்த ஒவ்வொரு பிரிவிலும் சூரியன் நுழையும் நாளை மாதத்தில் முதல் நாளாகக் கொண்டே மாதத்தின் நாட்கள் உருவாக்கப்பட்டன. அதே போல் ஏழு கோள்களை ஏNழுழு நாட்களாகக் கணித்தே வாரம் உருவாக்கப்பட்டது. ஆரம்ப காலத்தில் வார நாட்களின் எண்ணிக்கை வித்தியாசப்பட்டாலும் பிந்திய காலங்களில் உலக நாடுகள் வாரத்திற்கு ஏழு நாட்கள் என்ற அடிப்படையை ஏற்றுக் கொண்டன.

சூரியன் ஒரே வேகத்தில் சுற்றுவதால் இரவு பகல் உண்டாகிறது. இதனை அடியொற்றியே நாட்கணிப்பு உருவாக்கப்பட்டது. ஒரு நாளில் இத்தனை மணித்தியாலங்கள் என்ற உறுதிநிலை பெற்ற பின்னரே நிமிடங்கள் செக்கன்கள் என்பன நிர்ணயிக்கப்பட்டன.

ஒரு வருடத்திற்கு 365 நாட்களும் 12 மாதங்களும் 52 வாரங்களும் என்பது ரோமானிய கலண்டரின் அமைப்பாகும். ஆரம்ப காலத்தில் இந்தக் கலண்டர் ஆண்டுக்கு 304 நாட்களையும் 10 மாதங்களையுமே உள்ளடக்கித் தயாரிக்கப்பட்டது.

அன்றைய ரோமானிய சக்கரவர்த்தியான ஜுலியஸ் சீசர் இக்கலண்டரில் மாற்றங்களை ஏற்படுத்தினார் 304 நாட்களை 370 நாட்களாகவும், 10 மாதங்களை 12 மாதங்களாகவும், பெப்ரவரி மாதத்தை 28 நாட்களாகவும் ஆக்கினார். எனினும் கூட இது முழுமை பெறவில்லை. இதனையடுத்து கிரகரி என்பவரிடம் இப்பணி ஒப்படைக்கப்பட்து. அவரால் சீர் திருத்தி அமைக்கப்பட்ட கலண்டரே இன்றைய வழக்கத்திலுள்ளதாகும். மேலும் வாரத்தில் ஏழு நாட்கள் என்ற வழக்கம் யூதர்களால் அறிமுகம் செய்யப்பட்ட வழமையாகும்.


இவ்வாறு நிர்ணயம் செய்யப்பட்ட காலங்களுக்கு பெயர்கள் வைக்க வேண்டிய தேவையும் ஏற்பட்டது. அந்தப் பெயர்களை பின்வருமாறு காரணகாரிய நிமித்தம் பெயரிட்டனர்.
சூரியனைக் குறிக்கும் ளுருN என்ற வார்த்தை ளுருNனுயுலு எனவும், சந்திரனைக் குறிக்கும் ஆழுழுN என்ற வார்த்தை ஆழுNனுயுலு எனவும், வுருநு எனும் கிரேக்கக் கடவுளின் பெயரை வுருநுளுனுயுலு எனவும் றுழுனுநுN எனும் புதன் கடவுளின் பெயரை றுநுனுNநுளுனுயுலு எனவும், வுர்ழுசு எனும் இடிமுழக்கக் கடவுள் பெயரை வுர்ருசுளுனுயுலு எனவும், குசுநுலுயு எனும் கடவுளை நினைவு கூறி குசுஐனுயுலு எனவும், ளுயுவுருசு எனும் தேவதையின் பெயரை ளுயுவுருசுனுயுலு எனவும் வாரநாட்களுக்கு பெயரிட்டனர்.

மேலும் மாதங்கள் பன்னிரெண்டுக்கும் இதே அடிப்படையிலேயே பெயரிட்டனர். பண்டையகால 'ஜானூஸ்' எனும் தேவதையின் பெயரிலிருந்தே துயுNருயுசுலு தோன்றியது. எதற்கும் முன்னோடியாக விளங்கும் தேவதையாக இது இருந்ததினால் வருடத்தின் முதலாவது மாதத்திற்கு இப்பெயரிடப்பட்டது. 

அக்கால உரோமர்களால் விஷேடமாகக் கொண்டாடப்பட்ட 'பெப்ரவாரிஸ்' என்ற வைபவத்தை மையமாக வைத்தே குநுடீசுருயுசுலு தோன்றியது. இவ்வைபவத்தின் போது 'பெப்ரு' என அழைக்கப்படும் மெல்லிய ஆட்டுத் தோலினால் பாதையில் செல்லும் இளம் பெண்களை மெதுவாக அடிப்பார்களாம். இவ்வாறு அடிபடும் இளம் பெண்களின் வாழ்வு இன்பகரமாக கழியும் என்றொரு நம்பிக்கையும் அவர்களிடத்தில் இருந்ததாம்.

மேலும் உரோம விவசாயக் குடிமக்களின் திருவிழாவின் போது மகிமைப்படுத்தப்படும் 'மார்ஸ்' களின் நினைவே ஆயுசுஊர் என நிலைப்பெற்றது.

வசந்த காலத்துக்கு மெருகூட்ட மலரும் 'ஏப்ரலீஸ்' எனும் மலரை நிகர்த்த தேவதையின் பெயர் யுPசுஐடு என மருவியது. ஏற்கனவே 36 தினங்கள் கொண்டு விளங்கிய இம்மாதத்தை 30 நாட்கள் கொண்டதாக மாற்றி அமைத்தவர் ஜுலியஸ் சீசர் தான். 

உரோம மொழியில் மூத்தவர்கள் 'மெஜோரஸ்' என அழைக்கப்பட்டனர். 'மெயி' எனும் தேவதைக்கு விழா எடுக்கப்படும் இம்மாதத்திலேயே மூத்தவர்களும் இங்கு கௌரவிக்கப்பட்டனா. எனவே வருடத்தின் ஐந்தாவது மாதம் ஆயுலு எனப் பெயர் பெற்றது. 

உரோமர்கள் இளைஞர்களை கௌரவிப்பதற்கும் ஒரு மாதத்தை ஒதுக்கி இருந்தனர். அதற்கு 'ஜுனியர்ஸ்' எனப் பெயரிட்டிருந்னர். அதனையொட்டியே துருNநு பிறந்தது. 

உரோம பேரரசர் ஜுலியஸ் சீசரை கௌரவிக்க ஒரு மாதத்தின் பெயரை அமைக்க எண்ணியே துருடுலு உருவாக்கப்பட்டது.

உரோம பேரரசர்களுள் ஜுலியஸ் சீசரை போலவே பெயர் பெற்றவர் ஓகஸ்டஸ் சீசர். எனவே அவரைக் கௌரவப்படுத்த சூட்டப்பட்தே யுருபுருளுவு ஆகும்.

உரோம நாட்காட்டியின் பிரகாரம் ஏழாவது மாதமாக விளங்கியது செப்டம்பர் மாதம். ஏழு என்ற இலக்கத்ததைக் குறிக்கும் 'செப்டிமஸ்' எனும் சொல் மருவி செப்டம்பர் ஆனது. கிரகரி நாட்காட்டியில் ளுநுPவுநுஆடீநுசு ஒன்பதாவது மாதமாக அமைத்தார்.

உரோம நாட்காட்டியின் பத்துமாதம் கொண்ட ஆண்டின் எட்டாவது மாதம் ஒக்டோபர் ஆக விளங்கியது. எட்டு என்ற பொருள்படும் 'ஒக்டோ' எனும் வார்த்தையிலிருந்து கிரகரி கலண்டர் ரீதியில் பத்தாவது மாதமாகி ழுஊவுழுடீநுசு எனப் பெயர் பெற்றது.

உரோம நாட்காட்டி பிரகாரம் ஒன்பதாவது மாதமாக விளங்கிய நவம்பர் மாதம் ஒன்பது என்பதை லத்தீன் மொழியில் குறிக்கும் 'நொவெம்' என்ற வார்த்தையிலிருந்து பிறந்து கிரகரின் கலண்டர் படி Nழுஏநுஆடீநுசு பதினொறாவது மாதமாகியது.

உரோம ஆங்கில நாட்காட்டியின் இறுதி மாதமாக விளங்கியதால் லத்தீன் மொழியில் பத்து என்பது 'டிசெம்' எனும் பொருட்பட்டு இறுதி மாதம் னுநுஊநுஆடீநுசு எனப் பெயர் பெற்றது. ஏசு நாதர் என அழைக்கப்படும் ஈஸா (அலை) அவர்கள் பிறந்ததாகச் சொல்லப்படும் நாளிலிருந்து ஆரம்பமாகும் எமது வழமையிலுள்ள இக்கலண்டர் முறையானது ரோமானியக் கலண்டராகும். இது கி.பி 1582ம் ஆண்டு Pழிந புசநபழசல ஓஐஐஐ என்பாரால் அறிமுகப்படுத்தப்பட்டதாகும். இது உருவான முறையையே மேலே கண்டோம். 

ஜுலியன் கலண்டர்தான் கிறிஸ்துக் கலண்டர் என பெயர்மாற்றம் பெற்றது. ஆண்டுமானம் மாற்றம் பெற்றதே அதற்குரிய காரணம். அவர்களுக்கு மத்தியிலே கிறிஸ்து ஆண்டுமானத்தை குறித்தவர் யார் என கருத்து முரண்பாடு இருந்தபோதும் பெரும்பாலானோர் டயோனீஸிஸ் (னுழைலௌரைள நுஒபைரரள)  என்பவரே அதன் காரணகர்த்தா என ஏற்றுள்ளார்கள். உரோம் நிர்மாணிக்கப் பட்டதிலிருந்து 753 ஆம் ஆண்டில் கிறிஸ்த்து பிறந்தார் என்பதே அவரது கருத்து. என்றாலும் சரியான ஆண்டு எது என்ற கருத்து முரண்பாடு காணப்படவே செய்கிறது. இந்த ஆண்டுமானத்தைத்தான் நாம் தமிழில் கி.மு, கி.பி என்றும் ஆங்கிலத்தில் யு.னு (யுnழெ னுழஅini)இ யு.ஊ (யுவெந ஊhசளைவரஅ) அல்லது டீ.ஊ (டீநகழசந ஊhசளைவ) என்றும் குறிப்பிடுகின்றோம். முதல் முதலில் இந்த ஆண்டுமானம் மூலம் கணக்கிடப்பட்ட கலண்டர் அமோகவரவேற்புப்பெற்று அங்கீகரிக்கப்பட்டது இத்தாலியிலேதான். பின்னர்தான் ஏனைய கிறிஸ்த்துவ நாடுகள் அங்கீகரித்தன. ஐரோப்பாவிலே கி.பி 1000 ஆண்டளவில்தான் நடைமுறைக்குவந்தது. இன்று பரவலாகி நடைமுறையிலிருக்கும் நிலை 14ம் நூற்றான்டிலேதான் அமுலுக்குவந்தது.

இது தவிர பல சமூகத்தாரும் நாட்டுக்க நாடு, இனத்துக்கு இனம் பல்வேறு காரணங்களை அடிப்படையாகக் கொண்டு; தத்தமது நாட்காட்டிகளை அமைத்துக் கொண்டனர்.

எமது பக்கத்து நாடான இந்திய அரசு 'ஸாலிவாஹன சகாப்தம்' எனும் ஆண்டை தகுந்த முறையில் சீர்திருத்தி தேசிய கலண்டரைத் தயாரித்துக் கொண்டது. தழிழக அரசு திருக்குரலை ஈந்த வள்ளுவரை நினைவு கூறும் முகமாக அவர் பிறந்த தினத்தில் இருந்து தொடங்கும் வள்ளுவர் நாட்காட்டியை அறிமுகம் செய்தது. பௌத்தர்கள் புத்த பெருமான் முக்தி நிலை அடைந்ததை அடிப்படையாகக் கொண்டு 'பௌத்த யுகாதி' என்ற கலண்டரை அமைத்துக் கொண்டனர்.
குஜ்ராத் ராஜஸ்தான் ஆகிய பிரதேசங்களில் வாழும் மக்கள் விக்கிரமாதித்தனின் போர் வெற்றியைக் குறிப்பிடும் வகையில் 'விக்ரம் சம்வத்' எனும் கலண்டரை உருவாக்கினர். 
வங்கால மக்கள் மொகலாய சக்கரவர்த்தி அக்பரின் ஆட்சி காலத்தில் விவசாயம், நிலவரி என்பனவற்றால் உதவி பெற்றமைக்கு அத்தாட்சி கூறும் வகையில் 'சாஸ்' எனும் கலண்டரை உருவாக்கியதாகவும் சில இந்திய வரலாற்றுக் குறிப்புகளில் பதியப்பட்டுள்ளன.
இன்றைய காலத்தில் சுமார் 40 க்கும் மேற்பட்ட கலண்டர் முறைகள் மக்களின் பழக்கத்தில் இருப்பதாக சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இஸ்லாமியக் கலண்டர் முறை:

நபி (ஸல்) அவர்களின் காலத்திலும் சில காலக் கணிப்பீட்டு முறைகள் இருக்கவே செய்தன. அதாவது கஃபாவை இடிப்பதற்கு ஆப்ரகாம் படையெடுத்த நிகழ்வும், அவன் அழிக்கப்பட்டதும் மிகப் பெரிய ஒரு நிகழ்வாக இருந்தது. இதனை மையமாக வைத்தே அந்நேரத்தில் 'யாணை வருடம்' என கால நிர்ணயங்களைச் செய்து வந்தனர்.

நானும், நபி (ஸல்) அவர்களும் யாணை ஆண்டில் பிறந்தோம் என கைஸ் பின் மக்ரமா (றழி) அவர்கள் குறிப்பிடுகிறார்கள் நூற்கள்: திர்மதி 3552, அஹ்மத் 17218.

ஹிஜ்ரி 16ஆம் ஆண்டில் கி.பி. 638ல் அபூ மூஸா (றழி) அவர்கள், ஹழரத் உமர் (றழி) அவர்களுக்கு எழுதிய கடிதத்தில் 'உங்களிடமிருந்து கடிதம் வருகிறது. ஆனால் அதில் காலம் குறிப்பிடப்படுவதில்லை' என்று கூறியிருந்தார். அப்போது  உமர் (றழி) அவர்கள் மக்களை ஒன்றிணைத்தார்கள்.... என்ற செய்தியை இமாம் ஹாகிம் அவர்கள் பதிவு செய்துள்ளார்கள் என ஹாபிழ் இப்னு ஹஜ்ர் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள் நூல்: ஃபத்ஹுல் பாரி பாகம்:7 பக்கம்;:268 

இஸ்லாமிய ஆண்டை எந்த அடிப்படையாக வைத்துப் பயன்படுத்துவது என்பதில் நான்கு கருத்துக்கள் மக்களிடம் இருந்தன.

1. நபிகளாரின் பிறப்பு 
2. நபிகளார் இறைத் தூதரான ஆண்டு 
3. நபிகளார் ஹிஜ்ரத் செய்த ஆண்டு
4. நபிகளாரின் இறப்பு.

உமர் (றழி) அவர்கள் மக்களை ஒன்றிணைத்து 'வருடத்தை எந்த நாளிலிருந்து ஆரம்பிக்கலாம் என ஆலோசனை கேட்டார்கள். இப்போது அலி (றழி) அவர்கள் ' நபி (ஸல்) அவர்கள் இணை வைப்பு தேசத்தை விட்டு விட்டு நாடு துறந்து சென்ற நாளை எடுத்துக் கொள்ளலாமே' என ஆலோசனைக் கூறினார்கள். அவ்வாறே உமர் (றழி) அவர்கள் செய்தார்கள். 
அறிவிப்பவர்: ஸயீத் பின் முஸய்யப்  நூல்: ஹாகிம் 4287

எந்த மாதத்தை முதல் மாதமாகக் கணக்கிடுவது என்பதில் சிலர் ரஜப் என்றும் மற்றும் சிலர் ரமழான் என்றும் அபிப்ராயப்பட்டனர். உஸ்மான் (றழி) அவர்கள் முஹர்ரம் எனக் கூறினார்கள். ஏனெனில் இந்த மாதம் கண்ணியமிக்க மாதம், போர் தடை செய்யப்பட்ட மாதம், மேலும் மக்கள் ஹஜ் செய்து விட்டுத் திரும்பும் போது வரும் முதல் மாதமும் இம்மாதம் தான் எனக் குறிப்பிட்டார்கள். நூல்: ஃபத்ஹுல் பாரி பாகம்: 7 பக்கம்: 268

இக்கருத்தே தேர்வு செய்யப்பட்டு நடைமுறைப் படுத்தப்பட்டது. நபித்தோழர்கள் வருடக் கணக்கை கணக்கிடுவதற்கு ஹிஜ்ரத் நிகழ்வை தேர்வு செய்ய திருக்குர்ஆனின் ஒரு வசனம் தூண்டுகோலாக இருந்ததாக சில அறிஞர்கள் குறிப்பிட்டுள்ளனர். 

'ஆரம்ப நாள் முதல் இறையச்சத்தின் அடிப்படையில் நிர்மாணிக்கப்பட்ட பள்ளிவாசலே நீர் வணங்குவதற்குத் தகுதியானது. அதில் தூய்மையை விரும்பும் ஆண்கள் உள்ளனர். அல்லாஹ் தூய்மையானவர்களை விரும்புகிறான் (09:108)

இந்த வசனத்தில் ஆரம்ப நாள் எனக் குறிப்பிடப்பட்டது ஹிஜ்ரத்திற்குப் பின்னுள்ள ஆரம்ப நாளையே குறிக்கிறது. இவ்வாறு அல்லாஹ் குறிப்பிட்டுள்ளதால் இதுவே இஸ்லாமிய ஆண்டின் முதல் நாள் என உணர்த்தப்படுகிறது என அறிஞர்கள் கருதுகின்றனர்.

நபி (ஸல்) அவர்கள் ஹிஜ்ரத் செய்தது ரபீஉனில் அவ்வல் மாதமாக இருந்தாலும், அவர்கள் மதீனாவுக்கு நாடு துறந்து போக வேண்டும் என உறுதி கொண்டது முஹர்ரம் மாதத்தில் தான. எனவே முஹர்ரத்தை முதல் மாதமாக தேர்வு செய்தார்கள். நூல்: ஃபத்ஹுல் பாரி. புhகம்:07 பக்கம்:268)

மட்டுமன்றி இம்மாதத்தில் இஸ்லாமிய வரலாற்றில் பல முக்கிய விடயங்களும் நடை பெற்றிருப்பதை எமக்கு பல ஆதார பூர்வமான நூற்களிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

இவ்வாறாக இஸ்லாத்தின் பல அழகான முன்மாதிரிகளின் அடிப்படையில் உண்டாக்கப்பட்ட இஸ்லாமிய கலண்டர் முறைகள் நமக்கு இருக்கும் போழுது நாம் ஏன் இந்த யூதர்கள், கிறுஸ்தவர்களைப் பின்பற்ற வேண்டும்? முழுக்க முழுக்க இணை கற்பிக்கும் கடவுள்களினதும், அரசர்களின் பெயர்களோடும் சம்பந்த்பட்ட இந்தக் கலண்டர் முறைகளை எவ்வாறு சிறந்ததென தீர்மானிக்க முடியும்? என்பதை நாம் சிந்திக்க வேண்டும். இவர்களின் இந்த முறைகள் அவர்களின் பிழையான மத அனுஷ்டானங்களின் அடிப்படையிலேயே உருவாக்கப்பட்டிருக்கிறது என்பதை அவர்களின் நூல்களிலிருந்தே எமக்கு விளங்கலாம். 

P. முநnயெவா என்ற நூலாசிரியர் 'வுhந நுஒpடயயெவழசல ளுரிpடநஅநவெ வழ வாந யுளவசழழெஅiஉயட யுடயஅயnஉந'  என்ற  தனது நூலில் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.  

'வுhந புசநபழசயைn ஊயடநனெயச வழனயல ளநசஎநள யள யn iவெநசயெவழையெட ளுவயனெயசன கழச உiஎடை ரளந. ஐn யனனவைழைnஇ வை சநபரடயவநள வாந உநசநஅழnயைடள உலஉடந ழக வாந சுழஅயn ஊயவாழடiஉ யனெ pசழவநளவயவெ ஊhரசஉhநள. ஐகெநஉவ வைள ழசபைiயெட pரசிழளந றயள நஉஉடநளயைளவiஉயட. யுடவாழரபா ய எயசநைவல ழக ழவாநச உயடநனெயசள யசந in ரளந வழனயலஇ வாநல யசந சநளவசiஉவநன ய pயசவiஉரடயச சநடபைழைளெ ழச உரடவரசநள.'


இன்று சர்வதேச ரீதியாக கிரிகோரியன் நாட்காட்டி உள்நாட்டு விடயங்களுக்கு பயன்படுத்தப்படுகிறது. ஆதற்கும் மேலாக உரோமன் கத்தோலிக்க, புரடடஸ்தான்து மத சம்பந்தமான விடயங்களை ஒழுங்குறக் கணிக்கிறது. உண்மையில் அதன் அடிப்படை நோக்கம் மத சம்பந்தமான கிரியை தான். இன்று உலகில் வேறுபல கலண்டர்கள் காணப்பட்ட போதும் அவைகள் யாவும் தனிப்பட்ட மார்க்க விடயங்களிலும் அல்லது கலாசார அமைவுடனுமே மட்டுப்படுத்தப்பட்டு உள்ளன.

எனவே இஸ்லாமிய கலண்டர் முறை அல்லாத சகல கலண்டர் முறைகளும் அவரவர் மத அனுஷ்டானங்களுடன் தொடர்புபட்டே இருப்பதை மேற்கண்ட கருத்து எமக்குத் தெளிவு படுத்துகிறது. 

ஒரு சமூகம் மற்றுமொரு சமூகத்தால் சிந்தனா ரீதியாக ஆக்கிரமிக்கப்பட்டு அதன் தாக்கத்திற்கு உள்ளாகும் போது ஆக்கிரமித்த சமூகங்களின் நாட்காட்டிகளை பின்பற்றியது வரலாறு கூறும் உண்மை. நாட்காட்டிகளின் இவ்வாறான முக்கியத்தை உணர்ந்து முஸ்லிம்கள் ஹிஜ்ரி கலண்டரைப் பின்பற்றுவது எவ்வளவு அவசியமாகின்றது. ஹிஜ்ரி நாட்காட்டியைப் பின்பற்றுவது இஸ்லாமிய ஆளுமையின் சிறப்பு அடையாளமாகும்.

இந்த ஹிஜ்ரி கலண்டரின் முக்கியத்துவத்தைப் புரிந்து கொண்ட இஸ்லாத்தின் எதிரிகள் முஸ்லிம்களை திசை திருப்பி கிருஸ்துவக் கலண்டரான கிரேரியன் நாட்காட்டியை இஸ்லாமிய நாடுகளில் திணிப்பதற்கு முயற்சி செய்து அம்முயற்சியில் பெறும் வெற்றி கண்டனர். பெரும்பாலான இஸ்லாமிய நாடுகள் அவர்களின் நாட்காட்டியை தமது நாட்டின் தேசிய அதிகாரகபூர்வ கலண்டராக அறிவித்தன. அதன்; பின்பே சகல நாடுகளும் ஹிஜ்ரி கலண்டர் நடைமுறையை இழந்தன. 

இவ்வாறு வரலாறு நெடுகிலும் இந்த ஹிஜ்ரி கலண்டர் முறையை இல்லாதொழிக்க பல முயற்சிகள் இஸ்லாத்தின் விரோதிகளால் மேற்கொள்ளப்பட்டன. இதற்கு இடைத் தரகர்களாக அக்கால முஸ்லிம் ஆட்சியாளர்களைப் பயன்படுத்திக் கொண்டனர். 

1924ம் ஆண்டு மார்ச் மாதம் 3ம் தேதி முஸ்தபா கமால் அதாதுர்க் என்பவன் இஸ்லாமிய கிலாபத் ஆட்சியை ஒழித்தான். கிலாபத் இஸ்லாமிய ஆட்சி முறையை மீண்டும் கொண்டுவர நினைப்பவரை கொலை செய்யுமாறு கட்டளையிட்டான். மார்க்க கல்வி கற்பதற்கு தடைவிதித்தான். ஷாரீஆ நீதி மன்றங்களை இழுத்து மூடினான். அரபி மொழியை மாற்றி துர்க்கி மொழியை மட்டுமே நாட்டின் மொழியாக பிரகடனப்படுத்தினான். இஸ்லாமிய திருமண முறையை மாற்றினான்.

ஆட்சியாளர்கள் மட்டுமே திருமணம் செய்துவைக்க முடியும் என்று சட்டமியற்றினான். ஸலாம் கூற தடைவிதித்தான். ஹிஜாபிற்கும் தடைவிதித்தான். பலதார மணத்தை தடுத்தான். ஆண், பெண் இருபாலரும் கலந்து பயிலும்படி கல்விக் கூடங்களை மாற்றினான். முஸ்லிம் சமுதாயத்தை மார்க்க வரையறையிலிருந்தும் அதன் கலாச்சாரத்திலிருந்தும் வெளியேற்ற செய்த கொடுமைகள் ஏராளம்.

ஹிஜ்ரா காலண்டாரின் நடைமுறையை நிறுத்தி, கிருத்துவ காலண்டாரின்படி செயல்பட கட்டளையிட்டதும் வார விடுமுறை நாள் ஞாயிற்றுக் கிழமை என்று அந்த கொடியவன் அறிவித்ததும் மிகவும் கவனிக்க வேண்டிய அம்சமாகும்.

துர்க்கியை ஆட்சித் தலைமையாகக் கொண்ட முஸ்லிம் தலைமை தமது ஈமானிய பலவீனத்தால் யூதர்களுக்கு அடிமையாகத் துவங்கிய காலம் அது. 1926ம் ஆண்டு, இஸ்லாமிய மணிமகுடங்களில் ஒன்றாக ஹிஜ்ரி காலண்டரை புறக்கணித்துவிட்டு கிருத்துவக் காலண்டரை தங்களின் ஆட்சி காலண்டராக மாற்றினர். ஹிஜ்ரா காலண்டருக்கும் கிருத்துவக் காலண்டருக்கும் இடையே ஆன வித்தியாசமாகிய சுமார் 12 நாட்களை 1926ம் ஆண்டு நீக்கிவிட்டு டிசம்பர் மாதத்தை 18 நாட்களோடு முடித்துக் கொண்டு ஜனவரியைத் துவக்கினர்.

சஊதி அரேபியா மாத்திரம் ஹிஜ்ரி நாட்காட்டியை பயன்படுத்திக் கொண்டிருப்பதுடன், அவ்வாறு செயற்பட வேண்டும் என்பதை அந்நாட்டின் அரசியல் சாசன சட்டத்தின் இரன்டாவது பகுதியில் சட்டமியற்றியும் உள்ளது.

எமது நேர்வழி நடந்த நபித்தோழர்களால் முஸ்லிம்களின் தனித்துவத்தைப் பாதுகாத்து எமக்கென அமைத்துத் தந்த நாகரீகங்களை நாம் கைநழுவ விடாமல் நாமும், எமது மனைவி குழந்தைகள் வாழ்விலும் ஹிஜ்ரி கலண்டர் திகதி முறையை அமுல்படுத்த முயற்சிப்போமாக.!!











No comments: