![]() |
முஸ்லிம்கள் ஏன் அமைச்சரவையில் இடம் கேட்கிறார்கள்?
இன ரீதியமன அடிப்படையில் அல்ல! மத ரீதியான தேவைக்கு மட்டுமே!
-அஷ்-ஷைக் டீ.ஹைதர் அலி அல்-ஹலீமி-
இலங்கையின் ஜனாதிபதித் தேர்தல் முடிந்த அதே வேகத்தில் பாராளுமன்றத் தேர்தலும் முடிவுற்று இலங்கையின் 10வது பாராளுமன்றத்தின் உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டு முடிவுற்று அதன் கெபினட் உறுப்பினர்களும் தெரிவு செய்யப்பட்டு விட்டனர். ஆனால் “வரலாற்றில் முதல் தடவையாக முஸ்லிம் பிரதிநிதித்துவமற்ற அமைச்சரவையை நிறுவியமை தோழர்கள் விட்ட முதலாவதும் பாரதூரமானதுமான அரசியல் இராஜதந்திர தவறாகும்” என முஸ்லிம் சமூகத்திற்கு மத்தியில் பரவலாக பேசப்பட்டும், எழுதப்பட்டும் வருகின்றமை எல்லோராலும் அறியப்பட்ட விடயமாகும். இதன் மூலம் முஸ்லிம் சமூகத்தை இந்த அரசாங்கம் இரண்டாம் தரமாக நோக்குகின்றது எனவும், சமத்துவம் என்று சொல்லி வந்த அரசாங்கம் அதன் வாடை கூட இல்லாத கொள்கையாளர்களாக இருக்கிறார்கள் என்றெல்லாம் குற்றங்கள் சாட்டப்பட்டும் வருகின்றன. இவ்விவகாரத்தில் இருதரப்பு நியாயங்கள் பற்றி அலசிப் பார்ப்பது நம் சகலரினதும் பொறுப்பாகும்.
புதிய அமைச்சரவையில் 25 க்கும் உற்பட்ட பௌத்த, கிருத்தவ மற்றும் இந்து சமயங்கள் சார்ந்த உறுப்பினர்கள் உள்வாங்கப்பட்டிருக்கிறார்கள் என்பது உண்மை. ஆனால் ஒரு முஸ்லிமையாவது ஏன் அமைச்சரவையில் நீங்கள் அமர்த்தவில்லை? என்றால் அதற்கான அவர்கள் சார்ந்தோரின் பதில்கள் கீழ்வருமாறு:
- இன ரீதியாக நியமிக்கப்படுவதற்கு இது ஒரு மத நல்லிணக்க சபை அல்ல.
- எமது ஜே.வி.பீ. கட்சியின் செயலாளர் கூட அமைச்சரவையல்ல பாராளுமன்றமே வரவில்லை.
- எமது பாராளுமன்ற மூத்த உறுப்பினர்கள் பலர் இருந்தும் கூட அவர்களுக்கு எந்த அமைச்சுப் பதவிகளும் வழங்கப்பட வில்லை.
- வரலாற்றில் முதல் முறையாக பல உறுப்பினர்கள் சிங்கள மக்களின் பெருமளவான வாக்குகள் பெற்று முஸ்லிம் உறுப்பினர்கள் பாராளுமன்றம் வந்தமை.
- முஸ்லிம் எம்.பி. கள் தெரிவு செய்யப்படாத சில பிரதேசங்களுக்கு தேசியப்பட்டியல் வழங்கப்பட்டுள்ளமை.
- இன்னும் நிறைய சொல்லப்படுகின்ற காரணகர்த்தாக்களை யாவும் ஏற்றுக்கொள்ளத்தக்கவை மட்டுமல்ல உண்மையான விடயங்களும் தான்.
இனவாதமற்ற ஊழலற்ற அரசாக இது அமையும் என்பது எல்லா மட்டத்தில் உள்ளவர்களினதும் எதிர் பார்ப்பும் அவாவுமாகும். இதனடிப்படையில் புதிய சட்ட மூலம்கள் அல்லது சட்டவாக்கல்கள் இடம்பெறும் போது எல்லா மக்களினதும் நலன்களை முன்வைத்தே திருத்தங்கள் இடம்பெறும். ஏனெனில் எவரும் தம் இனம் அல்லது சமூகத்தாருக்கு அநீதம் இழைக்க விரும்பவும் மாட்டார்கள் அப்படி நடக்க விடவும் மாட்டார்கள்.
ஆனால் மதம் சார்ந்த விடயங்களில் (தற்பொழுதும், எப்பொழுதும் பேச்சுப் பொருளாக இருப்பதினால்) குறிப்பாக முஸ்லிம்களின் விவாக மற்றும் விவாகரத்துச் சட்டங்கள், வாரிசுரிமைச் சட்டங்கள், வக்பு சட்டம் போன்றவற்றில் திருத்தங்கள் செய்யப்படும் போது அவை (ஷரீஆ) இஸ்லாமிய மார்க்கம் சார்ந்த சட்டங்கள் என்பதினால் அவ்விடத்தில் ஒரு முஸ்லிம் அமைச்சர் இருக்கும் போது, அதனை ஷரீஆவுடன் முரண்படாத நிலையில் நகல்வுத் தன்மைகளை ஏற்படுத்த வழி செய்யலாம். இதுவே முஸ்லிம்களின் எதிர்பார்ப்பே அன்றி வேறு விதமான ஒரு எதிர்ப்பார்ப்பும் இல்லை என்பதனை சகல தரத்தாரும் புரிதல் அவசியமாகும். மேலும்; வேறு அமைச்சுப் பதவிகள் அல்லது பதவிதாங்குனர்களை விட அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுப் பதவி ஏன் எதிர்பாக்கப்படுகிறது என்றால் அதுவே சட்டம் இயற்றும் அதிகாரமுள்ள பதவியாகும். அப்படியான ஒரு இடத்தில் அதிகாரம் இருக்குமிடத்து சட்டசபைக்கு அது வருவதற்கு முன் முதல்; கட்டத்திலேயே சகலருக்கும் விளக்கப்படுத்தி இப்படியான ஒரு திருத்தம் தான் கொண்டு வரப்படல் வேண்டும் என்று வாதிட்டு திருத்தங்கள் செய்து கொள்ளலாம். அப்படி இல்லாத போது இதில் மிகப் பெரிய குழப்பங்கள் ஏற்படும் என்பதில் ஐமில்லை.
அமைச்சந்சரவை (Cabinet) என்றால் என்ன?
இலங்கை அமைச்சரவை (Cabinet of Sri Lanka) என்பது இலங்கை நாடாளுமன்றத்துக்குப் பொறுப்பான அமைச்சர்களின் பேரவையாகும். அமைச்சரவைக்கான உறுப்பினர்களை அரசுத்தலைவர் நியமிப்பார். அதிகாரபூர்வமாக அரசுத் தலைவரே அமைச்சரவையின் தலைவராக இருப்பார். அரசின் முக்கிய பிரச்சினைகளை விவாதிப்பதற்கு வாரத்தில் பல முறைகள் அமைச்சரவை கூடும்.
அதிகாரங்கள்:
இலங்கையின் அரசியலமைப்பு (பிரிவு 43-52) ன் படிக்கு கீழ்வரும் அதிகாரங்கள் இவர்களுக்கு வழங்கப்படுகின்றன.
கொள்கை உருவாக்கம்: கெபினட் அமைச்சர்கள் அந்தந்த அமைச்சகங்களில் தேசிய கொள்கைகளை வகுத்து செயல்படுத்துவதற்கு பொறுப்பானவர்கள்.
சட்ட முன்மொழிவுகள்: அவர்கள் தங்கள் அமைச்சுக்களின் பொறுப்பு பகுதிகள் தொடர்பான மசோதாக்கள் மற்றும் முன்மொழிவுகளை பாராளுமன்றத்தில் முன்வைக்கின்றனர். முக்கியமான தேசிய பிரச்சினைகளில் ஒரு கூட்டு முடிவெடுக்கும் அமைப்பாக அமைச்சரவை செயல்படுகிறது.
இலங்கை அரசியலமைப்பு சட்டயாப்பு மேற்படி கூறுமிடத்து சமூகம் சார்ந்த முடிவெடுக்கும் அந்த உயரிய சபையில் நம் சமூகத்து அல்லது இன அங்கத்தவர்கள் இருக்க வேண்டும் என விரும்புவது இனவாதமாகுமா என்பதை சகலரும் புரிந்து கொள்ள வேண்டும்.
1947 முதல் 2020 வரையிலான அமைச்சரவையில் முஸ்லிம்கள்..
(அமைச்சரவையில் இடம்பெற்றவர்கள் மாத்திரமல்லாமல் அமைச்சுப் பதவி பெற்ற சகலரினதும் பெயர்கள் இங்கு குறிப்பிடப்பட்டுள்ளன)
1. 1947 - 1952 - டீ.பீ.ஜாயா - தொழிலாளர் மற்றும் சமூக சேவைகள் அமைச்சர்
2. 1952 - - டாக்டர் எம்.சீ.எம்.கலீல் - தொழிலாளர் துறை அமைச்சர்
3. 1956 - 1959 - சீ.ஏ.எஸ்.மரிக்கார்- தபால், ஒளிபரப்பு மற்றும் தகவல் அமைச்சர்
4. 1960 - 1963 - டாக்டர் பதியுதீன் மஹ்மூத்- கல்வி மற்றும் ஒலிபரப்பு அமைச்சர்
சுகாதாரம் மற்றும் வீட்டு வசதி அமைச்சர்
5. 1965 - 1970 - எம்.எச்.மொஹமட்- தொழிலாளர், வேலைவாய்ப்பு மற்றும் வீட்டு வசதி
6. 1970 - 1977 - டாக்டர் பதியுதீன் மஹ்மூத் - கல்வி அமைச்சர்
7. 1977 - 1988 - ஏ.சீ.எஸ்.ஹமீட்- வெளிநாட்டு அமைச்சர்
8. 1989 - 1990 - ஏ.சீ.எஸ்.ஹமீட்- உயர் கல்வி, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப
நீதி அமைச்சர்
- அப்துல் ரசாக் மன்சூர் - வர்த்தகம் மற்றும் கப்பல் போக்குவரத்து
வர்த்தக மற்றும் வணிகம் அமைச்சர்
9. 1994- 2000 - எம்.எச்.எம்.அஷ்ரப் - துறைமுகங்கள், மற்றும் துறைமுக அபிவிருத்தி
10. 2001- 2005 - ஏ.ஆர்.எம்.ஏ. காதர் - கூட்டுறவுத்துறை அமைச்சர்
- பேரியல் அஷ்ரப் - கிழக்கு அபிவிருத்தி, புனர்வாழ்வு மற்றும்
புனரமைப்பு, கிராமிய வீடமைப்பு அபிவிருத்தி
மற்றும் மகளிர் விவகார அமைச்சர்
-வீடமைப்பு மற்றும் நிர்மாண கைத்தொழில், கிழக்கு மாகாண கல்வி மற்றும் நீர்ப்பாசன அபிவிருத்தி அமைச்சர்
2000- 2004 - ஏ.எச்.எம்.பவுசி- நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நெடுஞ்சாலைகள் மற்றும் முஸ்லிம் சமய விவகார அமைச்சர்
சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை வள அமைச்சர்
11. 2000- 2001 - றவூப் ஹக்கீம் - உளநாட்டு; மற்றும் சர்வதேச வர்த்தகம்,
முஸ்லிம் சமய விவகார அமைச்சர் துறைமுகங்கள் அபிவிருத்தி மற்றும் கப்பல் போக்குவரத்து அமைச்சர்
12. 2001- 2003:
- எம்.எச்.முஹம்மத்- மேற்கு மாகாண அபிவிருத்தி அமைச்சர்
- ஏ.எச்.எம்.அஸ்வர் - பாராளுமன்ற விவகார அமைச்சர்
- எம்.மஃரூப் - நகரப் பொதுப் பயன்பாடுகள் துறை அமைச்சர்
- அலவி மௌலானா - தொழிலாளர் துறை அமைச்சர்
- கபீர் ஹாஷிம் - மூன்றாம் நிலை கல்வி அமைச்சர்
- இம்தியாஸ் பா.மா.- மக்கள் தொடர்பு அமைச்சர்
- நூர்டீன் மஷ_ர்- வன்னி புனர்வாழ்வு உதவி அமைச்சர்
- மொஹிதீன் அப்துல் காதர் - கடற்றொழில் மற்றும் நீரியல் வள அபிவிருத்தி பிரதி அமைச்சர்
- அப்துல் மஜீத் - அஞ்சல் மற்றும் தொலைத் தொடர்பு பிரதி அமைச்சர்
- ஹ_ஸைன் பைலா - சிறுமற்றும் நடுத்தர தொழில் முயற்சிகள்
- ஏ.எல்.எம்.அதாவுல்லாஹ்- கிழக்கு மாகாண உட்கட்டமைப்பு அபிவிருத்தி அ
13. 2005:
- அமீர் அலி - அணர்த்த் நிவாரண அமைச்சு (கெபினட் அல்லாத)
- ரிஷாத் பதியுதீன் - மீள் குடியேற்றம் - (கெபினட் அல்லாத) பிரதி
- பஷீர் சேகு தாவுது - வீடமைப்பு பிரதி அமைச்சர்
- ஷேகு இஸ்ஸதீன் - தகவல் மற்றும் ஊடகத்துறை பிரதி அமைச்சர்
- அன்வர் இஸ்மைல் - கிழக்கு உட்கட்டமைப்பு அபிவிருத்தி பிரதி
- ஈ.ஏ.எல்.மரிக்கார் - கல்வி பிரதி அமைச்சர்
- பைசர் முஸ்தபா - சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர்
14. 2010:
- பேரியல் அஷ்ரப் - வீட்டுவசதி மற்றும் பொது வசதிகள் அமைச்சர்
- ஏ.எல்.எம்.அதாவுல்லாஹ் - உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள்
- ரிஷாத் பதியுதீன் - தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர்
- ஏ.எச்.எம்.பவுசி - அணர்த்த நிவாரண அமைச்சர்
- நகர்ப்புற அபிவிருத்தி அமைச்சர்
- றவூப் ஹக்கீம் - நீதி அமைச்சர்
- எம்.எச்.மொஹமட் - பாராளுமன்ற விவகார அமைச்சர்
- ஏ.ஆர்.எம்.ஏ.காதர் - சுற்றுச் சூழல் பிரதி அமைச்சு
- ஹ_சைன் பைலா - திட்ட அமலாக்க பிரதி அமைச்சர்
- பஷீர் சேகு தாவுத் - கூட்டுறவு மற்றும் உள்நாட்டு வர்த்தக பிரதி
- எம.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா - குழந்தைகள் மற்றும் மகளிர் விவகார பிரதி
- அன்வர் இஸ்மைல் - நீர்ப்பாசன அமைச்சர் (கெபினட் அல்லாத)
- எம்.என்.அப்துல் மஜீது - கூட்டுறவு அபிவிருத்தி கெபினட் அல்லாத மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி பிரதி அமைச்சர்
- பைசர் முஸ்தபா - சுற்றுச்சூழல் துணை அமைச்சர்தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி பிரதி அமைச்சர் முதலீட்டு ஊக்குவிப்பு பிரதி அமைச்சர்
15. 2015:
- ரிஷாத் பதியுதீன் - தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர்
- றவூப் ஹக்கீம் - நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர்
- அப்துல் ஹலீம் - தபால், தபால் சேவை மற்றும் முஸ்லிம் விவகாரம்
- கபீர் ஹாஷிம் - பொது நிறுவன மேம்பாட்டு அமைச்சர்
- உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர்
- நெடுஞ்சாலை மற்றும் சாலை மேம்பாட்டு அமைச்சர்
- பைசர் முஸ்தபா - மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் விளையாட்டுத்துறை அமைச்சர் மாகாண சபைகள், உள்ளூராட்சி அமைச்சர்
- ஏ.எச்.எம்.பவுசி - தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க இராஜங்கதேசிய ஒருமைப்பாடு மற்றும் சகவாழ்வுக்கான இராஜங்க
- எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா - புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க நெடுஞ்சாலை மற்றும் சாலை மேம்பாட்டு இராஜாங்க
- அமீர் அலி - கிராமிய பொருளாதார விவகாரங்களுக்கான பிரதி கடற்றொழில் மற்றும் நீரியல் வள அபிவிருத்தி மற்றும் கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர்
- எம்.எச்.எம்.எம்.ஹரீஸ் - விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர்பொது தொழில் முயற்சி மற்றும் கண்டி நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர்
- காதர் மஸ்தான் - மீள்குடியேற்றம், புனர்வாழ்வு மற்றும் வடக்கு அபிவிருத்தி பிரதி அமைச்சர்
- -அலி ஸாஹிர் மௌலானா - தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்கம் மற்றும் அரச கரும மொழிகள் பிரதி அமைச்சர்
16. 2020
- அலி சப்ரி - நீதி அமைச்சர் - வெளி விவகார அமைச்சர்
- காதர் மஸ்தான் - கிராமிய பொருதார இராஜாங்க அமைச்சர்
இலங்கை ஜனாதிபதிகளின் ஆட்சிக் காலத்தில் நியமிக்கப்பட்ட முஸ்லிம் Cabinet அமைச்சர்களின் விபரம்:
01. J. R. Jayewardene: (1978 -1989)
- A.C.S Hameed
- M.H. Mohamed
03. D.B. Wijetunga: (1993 - 1994)
- A.C.S. Hameed
04. Chandrika Kumaratunga: (1994 - 2005)
- M.H.M. Ashraff
- A.R.M. Abdul Cader
- A.H.M. Fowzie
- Rauff Hakeem
05. Mahinda Rajapaksa: (2005 - 2015)
- Ferial Ashraff
- A.L.M. Athaulla
- A.H.M. Fowzie
- Rauff Hakeem
- M.H. Mohamed
- Risad Badhiutheen
- Basheer Segu Dawood
06. Maithripala Sirisena: (2015 - 2019)
- Risad Badhiutheen
- Rauff Hakeem
- M.H.A. Haleem
- Kabir Hashim
07. Gotabaya Rajapaksa: (2019 - 2022)
- Ali Sabri
- Ahamed Nazeer Zainulabdeen
08. Ranil Wickremesinghe: (2022 - 2024)
- Ali Sabri
- Ahamed Nazeer Zainulabdeen
09. Anura Kumara Dissanayake: (2024 - Present)
??????
சமத்துவ உரிமை என்ற அடிப்படையில் நோக்கினால்…
சமத்துவம் என்ற வகையிலே தான் கடந்த கால பாராளுமன்ற சபைகளில் அதிகமான முஸ்லிம் உறுப்பினர்கள் உள்வாங்கப்பட்டுள்ளனர் என்பதை மேற்படி பட்டியலைப் பார்க்கும் போது விளங்குகிறது. பல என்.பீ.பீ. ஆதரவாளர்கள் நிறுவப்பட்ட அமைச்சரவையை நியாயப்படுத்தி பேசுகிறார்கள். நீங்கள் வாக்களித்தது தவறல்ல. 74 வருட ஊழலை ஒரு முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்ற ஒரே நோக்கோடு வாக்களித்தோம். ஆனால் அமைச்சரவையில் முஸ்லிம்கள் புறகணிப்பு கட்சியின் சமத்துவக் கொள்கைக்கு முரணானது என்பதை மறந்து விடலாகாது. சமத்துவ உரிமைச் சட்டத்தின் கீழ் 10 சத வீதமான முஸ்லிம்களாகிய எமக்கு 25 கெபினட் உறுப்பினர்களில் 2 அமைச்சுக்கள் கிடைக்க வேண்டும் என்பதே சமூக நீதி மற்றும் சமத்துவச் சட்டமாகும் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். எனவே தான் சமூக ஊடகங்களில் பரவலான விவாதத்தைத் தூண்டியும், பல்வேறு கோணங்களில் இருந்து விமர்சனங்களையும் ஈர்த்துள்ளது.
அமைச்சரவை என்பது ஒரு நாட்டை ஆளும் ஒரு தேசிய அமைப்பாக இருப்பதால், தேசத்தின் பன்முகத்தன்மையை பிரதிபலிக்கும் வகையில் அது அமைதல் வேண்டும் என எதிர்பார்க்கப்படுவது ஒருபோதும் பிழையாக மாட்டாது. சிலபோது சில பிரிவினர் விலக்கப்பட்டால் சமத்துமற்று பாகுபாடு காட்டப்பட்டதாக உணரப்படும். பெரும்பாலான நாட்டு மக்களின் நன்மதிப்பையும், ஆதரவையும் பெற்றுள்ள தற்போதைய அரசாங்கம், மனித உளவியல் மற்றும் உணர்வுகளை உணர்ந்து கொள்ள வேண்டும்.
கட்சியின் அல்லது தமது அரசாங்கத்தின் கொள்கைகள், தத்துவங்கள் மற்றும் கட்டமைப்புகள் இன்றியமையாதவை என்றாலும், அவை சமூகங்களை அந்நியப்படுத்துவது போல அல்லது ஒதுக்கப்பட்ட உணர்வை உருவாக்கும் வகையில் அமையக் கூடாது. இத்தகைய உணர்வுகள் ஒரு கசப்பான தோற்றத்தையும், பிளவுகளையும் உண்டுபண்ணும்
சமத்துவம் என்பது ஒரு அரசாங்கத்தின் அடிப்படையான நெறி ஆகும், மேலும் இது சகல இன மக்களையும் சமமான உரிமைகளுடன் பார்த்து நடத்துவது அவசியம். ஒரு நாட்டின் வளமும் வளர்ச்சியும் அனைத்து மக்களும் சமஅரசை அனுபவிக்கும் சூழலில் தான் சாத்தியமாகும். இன, மத, மொழி போன்ற வேறுபாடுகளை நீக்கி, ஒற்றுமையை மேம்படுத்துவதன் மூலம் மட்டுமே ஜனநாயகத்தின் சுவை உணர முடியும். அதனால், ஒரு நாட்டின் அரசாங்கம் அனைவரையும் ஒன்று போல் பார்த்து நடத்தும் போதுதான் உண்மையான சமத்துவத்தை அடைய முடியும்.
எனவே முஸ்லிம் சமூகத்தின் இந்த உணர்வு இன ரீதியானதன்று. மாறாக இது அவர்களின் உரிமை சார்ந்த விடயமாகவே நோக்கப்படல் வேண்டும். இவ்வரசுக்கு ஆதரவாக வாக்களிக்காதவர்கள் எவரும் இவ்விடயத்தை முறை தவறி உணர்வுகளை வெளிப்படுத்தாது. முறையாக இதனை குறித்த தரத்தாருக்கு எத்தி வைப்பதும், குறித்த அமைச்சரவைத் தெரிவில் தவறு நடந்திருக்கின்றது என்பதை ஆதரவாளர்களும் ஏற்றுக் கொண்டு செயற்படுவதுமே ஆரோக்கியமானது.
தாண்தோன்றித் தனமான அல்லது கண்மூடித்தமான ஆதரவு எந்த சூழலிலும் பிழையானதும் மற்றும் ஆபத்தான முடிவுகளையும் உருவாக்கும். யாரையும் சந்தேகமின்றி பின்பற்றுவது விவேகமற்ற செயல் ஆகும், ஏனெனில் அது தன்னுடைய சிந்தனையையும் பார்வையையும் மறுக்கச் செய்கிறது. சரியானதையும் தவறானதையும் பகுத்தறிந்து செயல்படுவதே மனிதனின் அடிப்படை கடமை. ஆதரவு அளிக்கும் போது அறிவு மற்றும் உணர்ச்சி இரண்டையும் சமநிலைப்படுத்துவது அவசியம்.
இறுதியாக.. முஸ்லிம்கள் அல்லாஹ்வை நம்பியவர்கள். யாருக்கும் இறை விசுவாசிகள் என்ற ஒரு சமூகத்தை வீழ்த்திடவோ அல்லது தாழ்த்திடவோ முடியாது. அப்படிப்பட்டவர்களின் கடந்தகால வரலாறு மிகத் தெளிவானது.
எனவே அடுத்தடுத்த நகர்வுகள் எவ்வாறு இடம்பெறப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்!



3 comments:
Nalla padhivu
ماشاء الله مقالة مناسبة لا بد التذكير الي من يهم هذا الأمر
Well saiD
Post a Comment