Pages

முன்மாதிரிமிக்க மாணவர்கள் - ஆசானை கௌரவித்தனர்!


கற்பதும், கற்றுக் கொடுப்பதும் இந்த மார்க்கத்தின் உயிர் நாடிகளாகும். வுpவசாயி நிலத்தை உரமிட்டு வளப்படுத்துகிறார், இதனால் நல்ல  விளைச்சல்  கிடைக்கிறது. அதுபோல்  ஆசிரியர்  அறிவு ஞானத்தையும், பண்புகளையும்  போதிக்கிறார்.  இதனால் அறிவும்  பண்பும் உடைய  சமுதாயமும்  உருவாகின்றது.  இவ்வாறு  உயர்ந்த சமுதாயத்தை உருவாக்குகின்றவர்கள் ஆசான்களே!

உத்தமர்களுள் கண்ணியத்துக்குரியவர்களும் மரியாதை செலுத்தப்பட வேண்டியவர்களும் ஆசான்களே!

அல்லாஹ் கூறுகின்றான்: 'விசுவாசிகளுக்கும் கல்வி ஞானமுடையவர்களுக்கும்  அல்லாஹ்  பதவிகளை உயர்த்துகின்றான்'. (சூரா முஜாதலா 11 ஆம் வசனம்)


'மகனே பெற்றோர் எம்மை உலக நெருப்பிலிருந்து பாதுகாக்கின்றனர். ஆசான்களோ மறுமையின் நெருப்பிலிருந்து நம்மைக் பாதுகாக்கிறார்கள் ' என்பது  ஓர்  அறிஞனின் சொல்லாகும்.

ஆகவே உலக  நெருப்பிலிருந்து நம்மைக் காப்பாற்றும் பெற்றாருக்கு மரியாதை செய்வது  போலவே நரக நெருப்பிலிருந்து நம்மைக் காக்கும் ஆசிரியர்களுக்கும் அதிக மரியாதை செய்ய வேணடும். அவர்களை எமது பெற்றார் போல கௌரவிக்க வேண்டும்.

இந்த உண்மையை சரியாக அறிந்தவர்கள் தாம் அட்டுலுகம காஷிபுல் உலூம் என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டு பின்  ஜாமிஆ இன்ஆமில் ஹஸன் என பெயர் மாற்றம் பெற்ற கல்லூரியின்  ஆரம்ப மற்றும் பழைய மாணவர்கள். கடந்த 26.12.2018 அன்று வத்தளை அல்-மாஸ் வரவேற்பு மண்டபத்தில் காலை 9:30 மணியளவில் தமக்கு வழிகாட்டிய தம்மை உருவாக்கிய ஆன்மீக ஆசானாகிய பெரிய ஹஸரத் என சகலராலும் அழைக்கப்படுகின்ற உஸ்தாத் ஹாஜா முஹ்யுத்தீன் அவர்களை கௌரவித்து பரிசில்களையும் வழங்கி வைத்தனர். அந்தப் பரிசில்களில் ஒன்று தான் புத்தம் புதிய ஒரு வாகனமொன்றையும் அந்த பழைய மாணவர்கள் ஹஸரத் அவர்களிடம் கையளித்தனர். இது இலங்கை அறபுக் கல்லூரிகளின் வரலாற்றில் முதல் நிகழ்வாகும் என்றும் பலர் கருத்தும் வெளியிட்டனர். நிகழ்ச்சியின் விஷேட விருந்தினராக ராஜகிரிய நிதா பவுன்டேஷன் நிறுவனத்தின் பணிப்பாளர் அஷ்-ஷைக் எம்.எம்.எம்.ஹஸன் பரீத் பின்னூரி அவர்கள் கெந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்.

குறித்த நிகழ்வில் ஆரம்ப மாணவர்கள், முன்னைய நாள் போதனாசிரியர்கள், முன்னைய மற்றும் தற்போதைய நிர்வாகிகள் உஸ்தாத்மர்கள் என சுமார் 150 பேருக்கும் மேற்பட்டவர்கள் கலந்து சிறப்பித்தனர். இறுதியில் பகலுணவுடன் நிகழ்ச்சிகள் யாவும் இனிதே நிறைவு பெற்றது.


















No comments:

Post a Comment

Yes Welcom