Pages

ஒரு தலைவர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உஸ்தாத் றஷுத் ஹஜ்ஜுல் அக்பர் நல்ல உதாரணம்!



ஒரு தலைவர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உஸ்தாத் றஷுத் ஹஜ்ஜுல் அக்பர் நல்ல உதாரணம்!

ஒரு தலைவன் என்பவன் தமக்குக் கீழுள்ளவர்களுக்கு வழிகாட்டவும் அவர்களை வழிநடாத்தவும் ஒரு சாதாரண பிரஜையாக மக்களோடு மக்களாக நின்று போராடுபவனாக இருக்க வேண்டும். இராணுவத் தளபதி போல கட்டளைகளைப் பிறப்பித்துவிட்டு தொண்டர்களும் மக்களும் தியாகங்களைச் செய்ய வேண்டுமென நினைப்பவனுக்கு தலைவன் எனச் சொல்ல முடியாது. முஸ்லிம்களின் தலைவர்கள் எப்படி இருக்க வேண்டுமென்று சரித்திரம் நமக்கு சொல்லித் தந்திருக்கின்றது. மாந்தர்களின் உலகத் தலைவர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் முதல் உஸ்மானிய பேரரசு வரைக்கும் உலகை ஆட்சி செய்த மிகப் பெரும் தலைவர்களிடத்தில் இது விடயத்தில் அழகிய முன்மாதிரிகள் இருக்கின்றன.


இதே அடிச்சுவடின் நிழலாகவே உஸ்தார் அவர்கள் இருந்தார்கள் என்றால் மிகையாகாது. பணிவும், அடக்கமும் தான் இவரின் தலைமைத்துவத்தை அலங்கரித்தது என்றே கூற வேண்டும். தலைமை ஆசனத்தில் அமர்ந்தாலே தலைக்கணம் பிடிக்கும் என்பது போலவே இந்தக் காலத்தின் பல தலைமைகள் இருப்பதை நாம் பார்க்கலாம். தமகக்குக் கீழுள்ளவர்களுக்கு ஸலாம் - முகமன் கூறுவதைக் கூட இழிவாகக் கருதும் எத்தனையோ தலைவர்களை நாம் பாhத்திருக்கிறோம். உஸ்தாத் அவர்கள் யாரை, எங்கே கண்டாலும் இன்முகத்துடன் ஸலாம் சொல்லி கைலாகு செய்பவர். பல ஆண்டுகளுக்கு முன்பு ஒரு தடவை நான் மக்கா முகர்ரமாவில் உம்ராவுக்கு வந்தவர்களுக்கு ஹோட்டல் அறையொன்றில் ஹாஜிகளை ஒன்று கூட்டி பயான் செய்வதற்காக தயாரான போது தேனீர் கோப்பையுடன் புதிய ஒருவர்; தலைகுணிந்து இருப்பதை அவதானித்தேன். சுற்று கவனித்துப் பார்த்த போது உஸ்தாத் அவர்கள் மனைவி சகிதம் ஒரு சாதாரன மனிதராக அமர்ந்திருந்தார். உடனே அவரை அழைத்து ஏதாவது மக்களுக்குச் சொல்லுங்கள் என்று வற்புறுத்திக் கேட்டுக் கொண்டதற்கிணங்க ஹஜ், உம்ராவின் ஆன்மீக ரீதியான நோக்கம்; பற்றி மிக அழகிய உரையொன்றை நிகழ்த்தினார். உரை முடிந்ததும் இவரா 'ஹஜ்ஜுல் அக்பர்' ? என்று அங்கிருந்தவர்கள் ஆச்சரியப்பட்டனர். தாம் ஒரு பேரியக்கத்தின் தேசிய தலைவர் என எவ்விடத்திலும் அடையாளப்படுத்தியதோ அல்லது தனி இடம் எடுத்துக் கொண்டதோ கிடையாது.

பதவியின் ஊடாக தான் எதிர்பார்த்த எல்லாவற்றையும் உழைத்து, வரப்பிரசாதங்களைப் பெற்று, இனி வேண்டாம் என்று அவருக்கு அலுத்துப் போகும் வரைக்கும் அவர் எக்காலத்திலும் தனது தலைமைப் பதவியை தமக்குக் கீழ் இருக்கும் இன்னுமொருவருக்கு விட்டுக் கொடுக்கமாட்டார். அவ்வாறே, தனக்குப் பிறகு தலைவராக வரக் கூடிய ஒருவரையேனும் அவர் வளர்த்தெடுப்பதிலும் அக்கறையற்றவராகவே இருப்பார். இப்படியான ஒருவர் ஒரு சமூகத்தின் தலைமையாக இருப்பாராயின், திடீரென அவர் அப்பதவியில் இல்லாமல் போகின்ற சந்தர்ப்பத்தில் ஒட்டுமொத்த மக்களும்; நடுக்காட்டில் கண்ணைக்கட்டி விட்டது போல் அப்படியே திக்குத் தெரியாமல் நின்றுவிடும். அவருக்குக் கீழே பணியாற்றிய பலரும் தமக்கிடையே தலைமைப் பதவிக்காக முட்டிமோதிக் கொள்வார்கள். ஆனால் உஸ்தாத் அவர்கள் பலநூறு தலைவர்களை உருவாக்கி, அவர்களுக்கான ஒரு களத்தை உருவாக்க யாப்பின் சர்த்துக்களில் புதிய முறைகளை உருவாக்கி விட்டுச் செல்கிறார்.

உஸ்தாத் அவர்கள் சுமார் 24 ஆண்டுகள் ஒரு இயக்கத்தின் தலைவனாக இருந்து அதன் அடர்ந்த, அகன்ற பல செயற்திட்டங்களை செவ்வன செய்து முடித்து, பல தனித்துவ அடையாளங்களை சுவடிகளாக தலைநிமிரச் செய்து விட்டே ஓய்வு பெறுகிறார். அவரது பலவீனங்களைக் காட்டிலும் பலம்களே அவரிடம் அதிகமிருந்தன. அவரது சேவைகளும் சமூக சிந்தனையும் தூரநோக்குமே இன்று ஜமாத் மலைபோல் எழுந்து நிற்கிறது.

புதிய யாப்பின் படிக்கு அவர் பதவி மாறுகிறது என்றதுமே ஒருகனம் அதிர்நது போனேன். இவரின் இடத்தை நிறப்பும் அளவுக்கு வேறு ஆளுமைகள் இருக்குமா? என நினைத்தாலும் இவரால் இவர் போன்ற அல்லது இவரை விட பல ஆளுமைகளை இவர் உருவாக்கியவர் என்ற அடிப்படையில் மகிழ்ச்சி தான். என்றாலும் நிறப்பப்பட வேண்டிய ஒரு ஆளுமை உஸ்தாத் அவர்கள்.

இது ஓய்வல்ல! ஒரு இடமாற்றம் தான். நாட்காலிகள் மாறலாம் ஒரு தாஈயின் இலட்சியப் பயணத்தின் இலக்குகளில் எந்தவொரு மாற்றமும் இடம்பெறாது. அன்று ஆசனத்திலிருந்து செயற்பட்டது போலவே இன்று மறு ஆசனத்தில் அமர்ந்து பயணமாகப் போகிறார். தொடர்ந்தும் அடுத்தடுத்த தலைமுறைகளை உருவாக்குவதிலும், சமூக சமயப் பணிகளில் தொடர்ந்தம் தொண்டாற்றுவார் என்பதில் ஐயமில்லை. அல்லாஹ் உங்களது சகல பணிகளையும் ஏற்றுக் கொள்வானாக என வல்ல அல்லாஹ்வை வேண்டுகிறேன். 

புதிதாக தெரிவு செய்யப்பட்டிருக்கும் இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் புதிய தலைவர் அஷ்ஷெய்க் எம்.எச்.எம். உஸைர் (இஸ்லாஹி) அவர்கள் நிச்சயம் கடந்த தலைவருடைய இடைவெளியை நிறப்புவார் என்ற நம்பிக்கை எமக்கிருக்கிறது. அல்லாஹ் அந்த திறமையையும். ஆளுமையையும் இவருக்கு வழங்க வேண்டுமென வல்ல அல்லாஹ்வை வேண்டுகிறேன்.

No comments:

Post a Comment

Yes Welcom