இஸ்லாமிய வங்கி முறையின் தோற்றமும் வளர்ச்சியும்.


 சர்வதேச ரீதியாக மிக வேகமாக வளர்ச்சியடைந்து வரும் துறையாக வங்கித்துறை கானப்படுகிறது. உள்நாட்டு வெளிநாட்டு வர்த்தகம் உள்ளிட்ட அனைத்து கொடுக்கல் வாங்கல் நடவடிக்கைகளும் இன்று வங்கிகளின் கைகளிலே தங்கியிருக்கின்றன. இவ்வாரு வங்கிகள் ஒரு நாட்டின் அபிவிருத்தியில் பிரதான இடத்தை வகிக்கின்றன.


பாரம்பரிய வங்கி முறைகள் வட்டியை அடிப்படையாக கொண்டே இயங்குகின்றன. ஆனால் இஸ்லாம் வட்டியை மிக கடுமையாக எதிர்க்கிறது. இந்த வகையில் வட்டி வங்கி முறைக்கு மாற்றீடாக புதிய ஒழுங்குகளை இஸ்லாமிய உலகம் வேண்டி நின்றது. இதன் விளைவாக நடைமுறையில் இருந்த பாரம்பரிய வங்கி முறைகளைகளுக்கு மாற்றீடாக ஷரீஆ அனுமதித்த வர்த்தகங்களும் முகவர் ஒப்பந்தங்களும் நடைமறைபடுத்தக்கூடிய இஸ்லாமிய வங்கிமுறை தோற்றம் பெற்றது.

 

முன்மாதிரிமிக்க மாணவர்கள் - ஆசானை கௌரவித்தனர்!


கற்பதும், கற்றுக் கொடுப்பதும் இந்த மார்க்கத்தின் உயிர் நாடிகளாகும். வுpவசாயி நிலத்தை உரமிட்டு வளப்படுத்துகிறார், இதனால் நல்ல  விளைச்சல்  கிடைக்கிறது. அதுபோல்  ஆசிரியர்  அறிவு ஞானத்தையும், பண்புகளையும்  போதிக்கிறார்.  இதனால் அறிவும்  பண்பும் உடைய  சமுதாயமும்  உருவாகின்றது.  இவ்வாறு  உயர்ந்த சமுதாயத்தை உருவாக்குகின்றவர்கள் ஆசான்களே!

உத்தமர்களுள் கண்ணியத்துக்குரியவர்களும் மரியாதை செலுத்தப்பட வேண்டியவர்களும் ஆசான்களே!

அல்லாஹ் கூறுகின்றான்: 'விசுவாசிகளுக்கும் கல்வி ஞானமுடையவர்களுக்கும்  அல்லாஹ்  பதவிகளை உயர்த்துகின்றான்'. (சூரா முஜாதலா 11 ஆம் வசனம்)

චන්ද්‍රිකාගේ මෙහෙයුම සාර්ථකයි. ශ්‍රිලනිපයේ පළුවක් ගලවයි





















මෛත්‍රීපාල + මහින්ද කුමන්ත්‍රණකාරී බලු හවුලට එරෙහි ශ්‍රීලනිප මන්ත්‍රීන් ගනනාවක් පාර්ලිමේන්තුව තුල ස්වාධීන මන්ත්‍රීන් වශයෙන් කටයුතු කිරීමට එකඟ කරවා ගැනිමට හිටපු ජනධිපතිනි චන්ද්‍රිකා බණ්ඩාරනායක මහත්මිය සමත්ව ඇති බව සමීප ආරංචි මාර්ග පවසයි

ஒரு தலைவர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உஸ்தாத் றஷுத் ஹஜ்ஜுல் அக்பர் நல்ல உதாரணம்!



ஒரு தலைவர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உஸ்தாத் றஷுத் ஹஜ்ஜுல் அக்பர் நல்ல உதாரணம்!

ஒரு தலைவன் என்பவன் தமக்குக் கீழுள்ளவர்களுக்கு வழிகாட்டவும் அவர்களை வழிநடாத்தவும் ஒரு சாதாரண பிரஜையாக மக்களோடு மக்களாக நின்று போராடுபவனாக இருக்க வேண்டும். இராணுவத் தளபதி போல கட்டளைகளைப் பிறப்பித்துவிட்டு தொண்டர்களும் மக்களும் தியாகங்களைச் செய்ய வேண்டுமென நினைப்பவனுக்கு தலைவன் எனச் சொல்ல முடியாது. முஸ்லிம்களின் தலைவர்கள் எப்படி இருக்க வேண்டுமென்று சரித்திரம் நமக்கு சொல்லித் தந்திருக்கின்றது. மாந்தர்களின் உலகத் தலைவர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் முதல் உஸ்மானிய பேரரசு வரைக்கும் உலகை ஆட்சி செய்த மிகப் பெரும் தலைவர்களிடத்தில் இது விடயத்தில் அழகிய முன்மாதிரிகள் இருக்கின்றன.

ஷைகுல் பலாஹ் சுருக்க வாழ்க்கை வர­லாறு

ஷைகுல் பலாஹ் சுருக்க வர­லாறு : 
காத்­தான்­குடி ஜாமி­அதுல் பலாஹ் அதிபர் மௌலானா மௌலவி 'ஷைகுல் பலாஹ்' எம்.ஏ. அப்­துல்லாஹ் ரஹ்­மானி அவர்கள் தென்­னிந்­தியா தஞ்சை மாவட்டம் அதிராம் பட்­டி­னத்தில் 21.03.1932 இல் பிறந்­தார்கள்.

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா புதிய நிர்வாகத் தெரிவு! முஃப்தியின் பதவி மோகமா? அல்லது மக்கள் தெரிவா?



சென்ற 24.07.2016 அன்று அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கான புதிய நிர்வாகத் தெரிவு நடைபெற்றது. அத்தெரிவில் ஏலவே இருந்த அதே நிறைவேற்றுக் குழு அங்கத்தவர்கள் மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இச்செய்தி கேட்ட பெரும்பான்மையான ஆலிம்களும்;, பொது மக்களும் தமது மகிழ்சியையும், ஆதரவையும் தெரிவித்திருந்த அதே வேளை சர்வதேச மட்டத்தில் பல அறிஞர்கள் பலரினாலும் பல பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

ஆனாலும் எமது நாட்டில் விரல் விட்டு எண்ணப்படக்கூடிய ஒரு சில சகோதரர்கள் சமூக ஊடகங்களில் தமது அதிருப்தியை வெளிப்படுத்தியது மட்டுமல்ல சிலர் தமது காழ்ப்புணச்சியையும் வெளிப்படுத்தியமை மிக மன வேதனையைத் தந்ததது. சிலர் தனிப்பட்ட முறையில் ஒரு சிலரின் மீதி இருக்கக் கூடிய கோபம், பொறாமை, அதிருப்தியின் காரணமாக முழு ஜம்இய்யாவையும், ஒட்டுமொத்த ஆலிம்களையும் குறை கூறியிருந்ததானது அவர்களின் மறுமை வாழ்வைக் கூட நாசப்படுத்தி விடுமோ என்று அஞ்சக் கூடிய முறையில் அவர்களின் பின்னூட்டல்களும், பதிவுகளும் அமைந்திருந்தன். மிகவும் சொற்பமானவர்களின் இந்தக் கருத்துக்களுக்கு பதில் சொல்லத் தேவையில்லை என்ற போதிலும் அந்த சொற்பமானவர்களும் எமது சகோதரர்களல்லவா! அவர்களும் இது பற்றித் தெளிவு பெற வேண்டும் என்ற நேக்கில் இக்கட்டுரை எழுதப்படுகிறது.

முஸ்லிம் வியாபாரிகள் கவனத்திற்கு!


–ரீ.ஹைதர் அலி அல்-ஹலீமி-
நாடு மீண்டும் ஒரு இனவாத தேசத்தை நோக்கிச் செல்ல ஆரம்பித்துள்ளதை நாம் அறிவோம். இவைகளுக்கிடையில் இனவாதிகளின் சில செயற் திட்டங்கள் குறித்து பலர் என்னுடன் கதைக்கின்றனர். கீழ்வரும் சில குறிப்பிட்ட விடயங்கள் தொடர்பாக பல துறைகளிலுமுள்ள வித்தியாசமான கோணங்களிலுமுள்ள பலரும் இதோ விடயத்தை என்னிடத்தில் பகிர்ந்து கொண்டதற்கிணங்க கீழ்வரும் விடயங்களை நான் உங்களுடனும் பகிர்ந்து கொள்கிறேன். உண்மையோ, பொய்யோ, அல்லது கற்பனையாகவோ இருக்கலாம். ஆனால் இது விடயத்தில் நாம் மிகக் கவனமாக இருப்பது மிக நல்லது. ஏனெனில் குழப்பங்களையும், கலவரங்களையும் ஏற்படுத்த சதிகாரர்கள் எந்த வழியால் வருவார்கள் என்று நாம் அறிய மாட்டோம்!