Pages

ஷைகுல் பலாஹ் சுருக்க வாழ்க்கை வர­லாறு

ஷைகுல் பலாஹ் சுருக்க வர­லாறு : 
காத்­தான்­குடி ஜாமி­அதுல் பலாஹ் அதிபர் மௌலானா மௌலவி 'ஷைகுல் பலாஹ்' எம்.ஏ. அப்­துல்லாஹ் ரஹ்­மானி அவர்கள் தென்­னிந்­தியா தஞ்சை மாவட்டம் அதிராம் பட்­டி­னத்தில் 21.03.1932 இல் பிறந்­தார்கள்.


இவர்­களின் தந்தை அல்­லாமா அல்ஹாஜ் முகம்­மது அபூ­பக்கர் ஆலிம் ஆவார்கள். இப்­பெ­ரியார் 1950 ஆம் ஆண்டு முதல் 1954 ஆம் ஆண்டு வரை மஹ­ர­கம மத்­ர­ஸதுல் கபூ­ரிய்யா அரபுக் கல்­லூ­ரியில் விரி­வு­ரை­யா­ள­ராகக் கட­மை­யாற்­றி­யுள்­ளார்கள்.

1955 ஆம் ஆண்டு முதல் 1965  ஆம் ஆண்டு வரை அட்­டா­ளைச்­சேனை ஷர்க்­கியா அரபுக் கல்­லூ­ரியில் அதி­ப­ராகக் கட­மை­யாற்றி பின்னர் இந்­தி­யாவில் கீழ்க்­கரை காயல்­பட்­டினம் போன்ற இடங்­களில் கல்விப் பணி­யாற்­றி­னார்கள்.

தந்தை அபூ­பக்கர் ஆலிம் ஷாஹிப் போன்று தன­ய­னான மௌலானா மௌலவி அப்­துல்லாஹ் ஹஸ்ரத் அவர்­களும் ஆலி­மாக வெளி­வ­ரு­வ­தற்­காக சொந்த ஊர் அதி­ராம்­பட்­டி­னத்தில் மத்­ர­ஸதுல் ரஹ்­மா­னிய்யா அரபுக் கல்­லூ­ரியில் சேர்ந்து மார்க்க கல்வி கற்று  01.04.1954 ஆம் ஆண்டு ரஹ்­மானி பட்­டத்­துடன் மத்­ரஸா வாழ்க்­கையை முடித்து வெளி­யே­றி­னார்கள்.

ஆசி­ரி­ய­ராக அதிராம் பட்­டினம் அல் மத்­ர­ஸதுல் ஸலா­ஹிய்­யாவில் அதி­ப­ராகப் பதவி ஏற்று நான்கு ஆண்­டுகள் நடத்­தி­னார்கள். அதன் பின்னர் தனது தந்­தை­யுடன் அப்­துல்லாஹ் ஹஸ்ரத் அவர்கள் 03.05.1958 ஆம் ஆண்டு இலங்­கைக்கு வந்து அட்­டா­ளைச்­சேனை அரபுக் கல்­லூ­ரியில் விரி­வு­ரை­யா­ள­ராகக் கட­மை­யாற்­றினார்.

பின்னர் 05.01.1955ல்இல் ஆரம்­பிக்­கப்­பட்ட காத்­தான்­குடி மத்­ர­ஸதுல் பலாஹ் அரபுக் கல்­லூ­ரிக்கு தகுந்த விரி­வு­ரை­யாளர் தேவைப்­பட்­டதால் மௌலானா மௌலவி அல்ஹாஜ் எம்.ஏ. முஹம்­மது அப்­துல்லாஹ் (ரஹ்­மானி) அவர்கள் 13.10.1959 ஆம் ஆண்டு உப அதி­ப­ராக காத்­தான்­குடி மத்­ர­ஸதுல் பலாஹ்வில் கட­மையைத் தொடர்ந்­தார்கள்.

இவர்­க­ளது அய­ராத முயற்­சி­யினால் காத்­தான்­கு­டியின் கண்­ணாக மத்­ர­ஸதுல் பலாஹ் இலங்கை முழு­வதும் ஒளி வீசத்­தொ­டங்­கி­யது. 

இலங்­கையில் முத­லா­வது அல்­குர்ஆன்  மனன 'ஹிப்ழ்' வகுப்பு மத்­ர­ஸதுல் பலாஹ்­வில்தான் முத­லா­வ­தாக 18.12.1971 இல் ஆரம்­பித்து வைக்­கப்­பட்­டது. இந்த வகுப்பை தென் இந்­தியா காயல் பட்­டி­னத்தைச் சேர்ந்த மர்ஹூம் மௌலானா மௌலவி அல் ஹாபிழ் ரீ.எம்.கே. செய்யித் அஹ்மத் (முத்து வாப்பா) ஆலிம் அவர்கள் ஆரம்­பித்து வைத்­தார்கள்.

இந்த 'ஹிப்ழ்' பணிக்­காக அதிபர் அப்­துல்லாஹ் ஹஸ்ரத் அவர்கள்  சம்­மாந்­து­றையைச் சேர்ந்த மௌலவி ஹாபிழ்  ஏ. ஹஜ்ஜி முஹம்மத் அவர்­களை  நிய­மித்­தார்கள்.

இவர்­களின் அய­ராத முயற்­சியின் கார­ண­மாக 1975 ஆம் ஆண்டு அல்குர் ஆனின் 6666 வச­னங்­க­ளையும் மனனம் செய்த முத­லா­வது ஹாபிழ்கள் குழு பட்டம் பெற்று வெளி­யே­றி­னார்கள். 

இலங்கை அர­சாங்­கத்தின் கல்வி அமைச்­சினால் 17.11.1959  இல் இம் மத்­ரஸா பதி­யப்­பட்டு 1983 ஆம் ஆண்டு இக் கல்­லூரி மத்­ர­ஸதுல் பலாஹ் என்ற பெயரை மாற்றி 'ஜாமி­அதுல் பலாஹ்' எனும் பெயரில் உயர்­க­லா­பீ­ட­மாக மாற்­றப்­பட்­டது.

அப்­துல்லாஹ் ஹஸ்ரத் அவர்கள் அதிராம் பட்­டினம் செ.மு.க.நூறு முஹம்­மது மரைக்­காயர் அவர்­களின் புதல்வி உம்முல் பஜ்­ரியா அவர்­களை 02. 09. 1961  ஆம் ஆண்டு மண­மு­டித்­தார்கள்.

இந்த இனிய வாழ்வில் மூன்று ஆண் குழந்­தை­களைப் பெற்­றெ­டுத்­தார்கள். முறையே மூத்த புதல்வர் முஹம்­மது  ரஹ்­ம­துல்லாஹ். முஹம்­மது முஸ்­தபா மூன்றாம் மகன் முஹம்­மது பறக்­கத்­துல்லாஹ் ஆவார்கள்.தனது மூத்த புதல்வர் முஹம்­மது ரஹ்­ம­துல்­லாஹ்­வையும் இளைய புதல்வர் பறக்­கத்­துல்­லாஹ்­வையும் காத்­தான்­குடி ஜாமி­அதுல் பலாஹ்வில் கல்வி பயில வழி செய்­தார்கள். அதன் பிர­தி­பலிப்பாக1991 ஆம் ஆண்டு ரஹ்­ம­துல்லாஹ் மௌலவி பட்டம் பெற்று பின்னர் வாழைச்­சேனை 'குல்­லி­யதுன் நஹ்­ஜதில் இஸ்­லா­மிய்யா' அரபுக் கல்­லூ­ரியில் அதி­ப­ராகக் கட­மை­யாற்­று­கின்றார். 

இரண்­டா­வது மகன் முஸ்­தபா மர­ண­ம­டைந்­து­விட்டார். மூன்­றா­வது மகன் முஹம்­மது பறக்­கத்­துல்லாஹ் கொழும்பு பெரிய பள்­ளி­வா­சலில் இயங்கும் 'ஜாமிஆ மதீ­னத்துல் இல்ம்' கல்­லூ­ரியில் அல்­ஹாபிழ் பட்டம் பெற்று காத்­தான்­குடி ஜாமி­அதுல் பலாஹ்வில் மௌலவி பட்டப் படிப்பைத் தொடர்ந்து இதே கல்­லூ­ரியில் போத­னா­சி­ரி­ய­ராகக் கட­மை­யாற்­று­கின்றார்.

55 வருட கால­மாக பெற்ற தாயை பிறந்த பொன்­னாட்டை உற்­றாரை உற­வி­னரை சுற்­றத்­தாரை நண்­பர்­களை பிரிந்து கடல் கடந்து வந்து கல்விப் பணி­யாற்­றிய அன்னார் சொந்த ஊரில் தங்­கி­வாழ்ந்த காலம் கொஞ்­சம்தான். 

தலை­நகர் கொழும்பு 2 ஆம் குறுக்குத் தெரு சம்­மாங்­கோட்டார் 'ஜாமிஉல் அழ்பர்' பள்­ளி­வா­யலைக்  கட்­டு­வ­தற்கு நிலம்­கொ­டுத்து அதனை அழ­காகக் கட்டி முடித்­த­ பெருமை அப்­துல்லாஹ் ஹஸ்­ரத்தின் பாட்­டனார் அப்துல் காதிர் ஆலிம் ஸாஹிப் அவர்­க­ளையே சாரும்.இந்தப் பரம்­ப­ரை­யினர் இன்­று­வரை இப்­பள்­ளியை நிரு­வ­கிப்­பதும் அப்­துல்லாஹ் ஹஸ்ரத் அவர்­களும் இப்­பள்­ளியில் பிர­தான நிரு­வா­கி­யாக இருப்­பதும் குறிப்­பி­டத்­தக்­கது.

தனது வாழ்­நாளை ஜாமி­அதுல் பலாஹ்வின் சேவைக்­காக அர்ப்­ப­ணித்த அற்­புத மனி­த­ரான ஹஸரத் அவர்­க­ளிடம் கல்வி கற்று 2015 வரை   404 மௌல­வி­மார்­க­ளும் 387 ஹாபிழ்­களும் வெளி­யே­றி­யுள்­ளனர் வெளி­யே­றிய அனைத்து பலா­ஹி­களும் அவ­ரி­டமே கல்­வி­கற்­ற­வர்கள் என்­பது இங்கு குறிப்­பி­டத்­தக்­கது.

இத்­த­கைய மதிப்­புள்ள மகான் அப்­துல்லாஹ் ஹஸ்ரத் அவர்கள் இலங்கை மண்ணில் ஆற்­றிய பணி­களைச் சமு­தாயம் மறந்­து­விட முடி­யாது.

இவர்­களின் தன்­னி­க­ரற்ற பணி­களால் இக் கல்­லூரி பெரு வளர்ச்சி கண்­டி­ருப்­பதை யாவரும் அறிவர். இரவு பக­லாக இதன் வளர்ச்­சிக்­காக அய­ராது உழைத்துக் கொண்­டி­ருக்­கி­றார்கள்.

 ஜாமி­ஆவின் அதி­ப­ராக இருப்­ப­துடன் காத்­தான்­குடி நகரை இஸ்­லா­மிய நெறி­மு­றையில் வழி­நடாத்தும் தலை­வ­ரா­கவும் இலங்கை முழு­வ­திலும்  வாழும்  மக்­களால் மதித்துப்  போற்­றப்­படும் ஒரு பெரி­யா­ரா­கவும் விளங்­கு­கி­றார்கள்.

காத்­தான்­குடி மக்­களின் இன்ப துன்­பங்­க­ளி­லெல்லாம் பங்கு கொண்டு பிரச்­சி­னைகள் ஏற்­ப­டும்­போது அவற்றை சுமு­க­மாகத் தீர்த்து வைத்து ஒரு சமா­தானத் தூது­வ­ராகச் செயற்­ப­டு­கி­றார்கள்.

அது­மட்­டு­மல்­லாமல் இலங்­கையின் பல பகு­தி­க­ளிலும் சமய விழாக்­க­ளுக்கும் அறபுக் கல்­லூ­ரி­களின் பட்­ட­ம­ளிப்பு விழாக்­க­ளுக்கும் இவர்கள் அழைக்­கப்­பட்டு கௌர­விக்­கப்­ப­டு­கி­றார்கள். இலங்­கையில் புதிய தொழுகை நேரம் அமுல்­ப­டுத்­து­வதில் பிரச்­சி­னைகள் எழுந்­த­போது இவர்கள் தலை­யிட்டு அதனை சுமு­க­மாகத் தீர்த்து வைத்­ததால் இலங்கை முழு­வ­திலும் புதிய தொழுகை நேரம் அமுல்­ப­டுத்­தப்­பட்­டது.

 காத்­தான்­குடி ஜம்­இய்­யதுல் உல­மாவும் பள்­ளி­வா­யல்கள் முஸ்லிம் நிறு­வ­னங்கள் சம்­மே­ள­னமும் தொடர்ந்து சிறப்­பாகச் செயற்­ப­ட­வேண்டும் என்­பதில் அதிக அக்­கறை கொண்டு அவற்றின் ஆலோ­ச­க­ராக விளங்கி தமது மேலான ஆலோ­ச­னை­களால் அவற்றை வழிநடாத்தி வருகிறார்கள். பணிவும், தன்னடக்கமும் ஷைகுல் பலாஹ் அவர்களிடம் இயற்கையாகவே அமைந்து விட்ட பண்புகள்.

எல்லோருடனும் அன்பாகப் பேசி, சாந்தமாக அளவளாவி அனைவர் மனத்தையும் கவர்ந்துவிடும் தனிச்சக்தி இவர்களிடம் உள்ளது.
இஸ்லாமிய மார்க்க அறிவில் ஆழ்ந்த புலமை மிக்க இவர்கள் தமது மாணவர்களைத் தேர்ந்த அறிஞர்களாகவும் உயர்ந்த ஒழுக்க சீலர்களாகவும் ஆக்குவதில் மகத்தான பணி செய்து கொண்டிருக்கிறார்கள்.

No comments:

Post a Comment

Yes Welcom