Pages

முஸ்லிம் வியாபாரிகள் கவனத்திற்கு!


–ரீ.ஹைதர் அலி அல்-ஹலீமி-
நாடு மீண்டும் ஒரு இனவாத தேசத்தை நோக்கிச் செல்ல ஆரம்பித்துள்ளதை நாம் அறிவோம். இவைகளுக்கிடையில் இனவாதிகளின் சில செயற் திட்டங்கள் குறித்து பலர் என்னுடன் கதைக்கின்றனர். கீழ்வரும் சில குறிப்பிட்ட விடயங்கள் தொடர்பாக பல துறைகளிலுமுள்ள வித்தியாசமான கோணங்களிலுமுள்ள பலரும் இதோ விடயத்தை என்னிடத்தில் பகிர்ந்து கொண்டதற்கிணங்க கீழ்வரும் விடயங்களை நான் உங்களுடனும் பகிர்ந்து கொள்கிறேன். உண்மையோ, பொய்யோ, அல்லது கற்பனையாகவோ இருக்கலாம். ஆனால் இது விடயத்தில் நாம் மிகக் கவனமாக இருப்பது மிக நல்லது. ஏனெனில் குழப்பங்களையும், கலவரங்களையும் ஏற்படுத்த சதிகாரர்கள் எந்த வழியால் வருவார்கள் என்று நாம் அறிய மாட்டோம்!

நாம்; வாடிக்கையாளருடன்!
அதாவது முஸ்லிம் வியாபாரிகள் குறிப்பாக ஜவுலிக்கடை (வுநஒவடைந), செருப்புக்கடை, அல்லது ஆபரணக் கடைகள் வைத்திருப்பவர்கள் தமது பெண் வாடிக்கையாளர்களோடு மிகக் கவனமாக நடந்து கொள்ள வேண்டும். அவர்கள் பொருட்கள் கொள்வனவு செய்யும் நோக்கமில்லாமல் வேறு ஏதாவது ஒரு வன்முறையைத் உருவாக்க திட்டமிட்டும் வரலாம். ஆடைகளை அளவு பார்த்தல் அல்லது அணிவித்து விடல் போன்ற காரியங்களை ஆண்கள் செய்வதை முற்றாகத் தவிர்ந்து கொள்ளல் வேண்டும். தவறியாவது மேணி தட்டுப்படல் அல்லது தொடுதல் போன்ற காரியங்கள் எம்மை குற்றவாளிகளாக ஆக்கவும் அல்லது கலவரங்களை ஏற்படுத்தவும் ஏதுவாகும்.

எமது பெண் ஊழியர்கள்!
எமது கடையில் அல்லது வியாபார ஸ்தலத்தில் இருக்கும் பெண் ஊழியர்கள் விடயத்திலும் நாம் கவனமாக இருக்க வேண்டும். சில தினங்களுக்கு முன் ஒரு அந்நிய சகோதரர் 'நீங்கள் எமது வாலிபப் பெண்மனிகளை உங்கள் கடைகளில் வேலைக்கு வைத்திருப்பது போல உங்கள் வாலிபப் பெண்மணிகளை எமது கடையில் வேலைக்கு அமர்த்துவீர்களா?' எனக் கேட்டு இருக்கிறார். அத்துடன் வேலைக்கு மாத்திரம் பயன்படுத்தினால் பரவாயில்லை வேறு காரியங்களுக்காகவும் அவர்கள் பயன்படுத்தப்படுகிறார்கள். மிகக் கதியில் இதற்கெல்லாம் பாடம் கண்டு கொள்வீர்கள் என அவர் கூறியும் உள்ளார். குறைந்த ஊதியத்திற்காய் நாம் தேடும் பெண் ஊழியர்களால் சில போது பல தப்புக்களும் தவறுகளும் ஏற்பட வாய்ப்புக்கள் நிறையவே இருக்கின்றன. மட்டுமல்ல எமது வியாபாரத்தில் பரகத்தும் இல்லாமல் போய் விடும். முடிந்த அளவு அவர்களை தவிர்ப்பதே மேல்.

எனவே குறித்த இரண்டு விடயங்கள் தொடர்பாகவும் நாமும் எமது கடையில் வேலை செய்கின்ற ஏணைய ஆண் ஊழியர்களுக்கும் இது தொடர்பாக விளக்கமளித்து இது விடயத்தில் மிகக் கவனமாக இருக்க முயற்சிப்போமாக! அல்லாஹு தஆலா எம்மை சகல விதமான குழப்பங்களை விட்டும் பாதுகாப்பானாக!

No comments:

Post a Comment

Yes Welcom