Pages

இலங்கை - தமிழக உலமா சபைகள் சந்திப்பு – ஒரு வரலாற்று நிகழ்வு


இலங்கை முஸ்லிம்களுக்கும் தமிழகத்திற்கும் மிக நெருங்கிய தொடர்புகள் இருந்து வருவதை நாம் வரலாறு நெடுகிலும் பார்த்து வருகிறோம். அத்தொடர்புகள் மார்க்க ரீதியாகவும், தொழில் ரீதியாகவும் மட்டுமன்றி திருமண கொடுக்கல் வாங்கல் ரீதியாகவும் இருப்பது குறிப்பிடத்தக்க ஒன்றாகும். இத்தொடர்புகள் வரிசையில் வரலாற்றில் எழுதி வைக்கவேண்டிய ஒன்றாகவே மேற்படி இச்சந்திப்பும் அமைந்திருந்தன என்பது பலராலும் பேசப்பட்ட விடயமாகும்.

Two Presidents
சென்ற 05.03.2015 அன்று காலை 10.00 மணியளவில் 281, ஜயந்த வீரசேகர மாவத்தையில் அமைந்துள்ள இகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் புதிய தலைமைக் கட்டடிடக் காரியாலயத்தில் குறித்த சந்திப்பு நடைபெற்றது. தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா சபைத் தலைவரும், ஜே.எம்.ஏ. அறபுக் கல்லூரி பேராசிரியர், ஷைகுல் ஹதீஸ், அபுல் பயான் மௌலானா ஏ.ஈ.முஹம்மது அப்துல் ரஹ்மான் ஹழரத் மிஸ்பாஹி அவர்கள் மற்றும் தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா சபையின் பொதுச் செயலாளர் மௌலானா ரிழா பாக்கவி ஹழரத் அவர்களும், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் துணைத் தலைவர்களுள் ஒருவரான அஷ்-ஷைக் ஏ.ஜே.அப்துல் ஹாலிக் அவர்கள் மற்றும் அ.இ.ஜ.உ வின் பொதுச் செயலாளரான அஷ்-ஷைக் எம்.எம்.ஏ.முபாரக் மதனி அவர்களினதும் இருதரப்பு தலைமையில் இச்சந்திப்பு நடைபெற்றது. இச்சந்திப்பின் நோக்கம் இருதரப்பு கருத்துக்களை பரிமாறுவதும் இலங்கை ஜம்இய்யாவின் நடைமுறைகளை அறிந்து கொள்வதும் ஆகும்.


Two Secretaries
அஷ்-ஷைக் ஏ.ஜே.அப்துல் ஹாலிக் அவர்கள் அறிமுக நிகழ்ச்சியை நடத்தினார். அதனையடுத்து பொதுச் செயலாளர் அவர்கள் ஜம்இய்யாவின் பணிகள் பற்றியும், அது கடந்து வந்த பாதைகள் பற்றியும் தெளிவுபடுத்தினார். அது போலவே இலங்கையில் பரவி வருகின்ற இஸ்லாமிய அகீதாவுக்கு முரணான சில கூட்டங்கள் பற்றிய தெளிவுகளை அஷ்-ஷைக் எஸ்.எல்.எம்.நவ்பர் கபூரி வழங்கினார். பகலுணவுக்குப் பிறகு தொடர்ந்தும் ஜம்இய்யாவின் ஃபத்வாக்குழுவின் செயற்பாடுகள் பற்றியும், ஃபத்வா கொடுக்கும் முறை பற்றியும் ஃபத்வாக் குழு இணைப்பாளர் அஷ்-ஷைக் எம்.ஹாரிஸ் அனீஸ் அல்-றஷாதி விளக்கமளித்தார். அன்றைய நாள் இறுதியில் பிறை பார்த்தல் தொடர்பான விடயங்களை பிறைக்குழு இணைப்பாளர் அஷ்-ஷைக் எம்.அப்துல் வஹ்ஹாப் அவர்கள் தெளிவுபடுத்தினார்கள். 

மறுநாள் வெள்ளிக்கிழமை இலங்கையில் ஹலால் தொடர்பான பணிகள் எவ்வாறு செயற்பட்டன என்பது பற்றி அஷ்-ஷைக் எம்.இர்பான் முபீன் அவர்களும் அதனைத் தொடர்ந்து ஒத்துழைப்புக்கும், ஒருங்கிணைப்புக்கமான கவுன்சிலின் செயற்பாடுகள், மற்றும் மக்தப் தொடர்பான செயற்பாடுகள் பற்றியும் இம்இய்யாவின் கௌரவ தலைவர் அஷ்-ஷைக் எம்.ஐ.எம்.ரிஸ்வி முஃப்தி அவர்கள் தெரிவுபடுத்தினார்.

கண்டி மாவட்டம் மற்றும் அக்குரணை பிரதேசக் கிளையின் சந்திப்புக்கள்:

குறித்த பிரதேசக் கிளைகளின் சந்திப்பு மறுநாள் மாலை சுமார் 4.30 மணியளவில் அக்குரணை அஸ்னா ஜம்இய்யா காரியாலயத்தில் நடைபெற்றது. அக்கூட்டத்தில் மாவட்ட, பிரதேச பல உலமாக்கள் கலந்து கொண்டனர். அதில் மாவட்டக்கிளைத் தலைவர் அஷ்-ஷைக் எச்.உமர்தீன் அவர்கள் வரவேற்புரையை நிகழ்த்தினார். அதனைத் தொடர்ந்து தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா சபையின் பொதுச் செயலாளர் மௌலானா ரிழா பாக்கவி ஹழரத் அவர்கள் அறிமுக நிகழ்ச்சியை நடத்தினார். அதில் அவர் குறிப்பிட்டதாவது:

'இங்கு சமுகம் தந்திருக்கும் எமது ஜமாஅத்துல் உலமாவுடைய அங்கத்தவர்கள்; அனைவரும் தமிழ் நாட்டில் மிகப் பெரிய பதவிகளுடைய ஆலிம் பெரும் மக்கள். எழுத்தாளர்கள் என்றும், பேச்சாளர்கள் என்றும், அரச பயிணியில் இருப்பவர்கள் எனவும் பல்துறை சார்ந்தவர்கள். நாமும் உங்களைப் போலவே பல செயற்திட்டங்களையும், தீன் பணிகளையும் புரிந்து கொண்டிருப்பவர்கள். இந்தியா என்றாலே சகலவற்றக்கும் முன்னிற்கும் ஒரு நாடு. தஃவாப் பணிகளானாலும் அல்லது வேறு சமூக மேம்பாட்டிற்கான பணிகளானாலும் சரி நாமே பிறருக்கு முன்மாதிரியாக இருக்கறோம். ஆனாலும் சிலோன் ஜம்இய்யத்துல் உலமாவின் பணிகள் உலக முழுவதும் பேசப்படுவைகளாக ஆகிவிட்டன. நாம் உங்களிடத்தில் அப்பணிகளையும், செயற்திட்ட முறைகளையும் அறிந்துகொள்வதற்கு வெட்கப்படத் தேவையில்லை.'என்றார்.

அதனைத் தொடர்ந்து அக்குரணை ஜம்இய்யாவின் செயற்திட்டங்கள் பற்றி அதன் கொளரவ தலைவர் எனது ஆசான் அஷ்-ஷைக் எம்.ஸியாம் அல்-யூசுபி அவர்கள் தெளிவுபடுத்தினார்கள். அவர்களின் அந்த செயற்திட்ட அறிக்கையானது சகலரையும் மகிழ்ச்சியடைய வைத்தது குறிப்பிடத்தக்கதாகும். நிகழ்ச்சியை அதன் கௌரவ பொதுச் செயலாளர் மௌலவி எம்.நயீம் பஹ்ஜி அவர்கள் தொகுத்து வழங்கினார்கள்.


இலங்கை அறபுக் கல்லூரிகள் ஒன்றியத்தின் (அல்-இத்திஹாத்) சநதிப்பு:

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் மற்றுமொரு முயற்சியின் பிரதிபலனே 2007-ஆம் ஆண்டு அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்ட இலங்கை அறபு மத்ரஸாக்களுக்கான ஒன்றியம். அதன் தோற்றம், பணிகள் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் பற்றியும் காணொலி மூலம் தெளியு வழங்கினார் அதன் பொதுச் செயலாளர் அஷ்-ஷைக் எஸ்.ஏ.எம்.ஜஃபர் றஹ்மானி அவர்கள்.
தொடர்ந்தம் கருத்துப் பரிமாறல்கள் நடைபெற்றன. தமது உத்தியோகபூர்வ சந்திப்புக்களின் முடிவுரையாக தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா சபைத் தலைவர் மௌலானா ஏ.ஈ.முஹம்மது அப்துல் ரஹ்மான் ஹழரத் மிஸ்பாஹி அவர்கள் குறிப்பிடும் போது:
'உண்மையில் நாம் இங்கு வந்து சிலோன் ஜம்இய்யாவைச் சந்திக்கும் நோக்கம் எமக்கு இருக்கவில்லை. தமிழ் நாட்டைச் சேர்ந்த சமூக சேவையாளர் சகோதரர் ரபீக் பாய் அவர்கள் எம்மை மூன்றாண்டுகள் தொடராக சிலோன் ஜம்இய்யாவைப் பார்க்க வேண்டும். நாமும் அவர்களின் செயற்திட்டங்களைப் பார்த்து அது போலவே எமது நாட்டிலும் செயற்படுத்த வேண்டும் எனவும் கூறி வந்தார். விமான நிலையத்திலும் வைத்து நாம் எதனைப் பார்க்க வேண்டும்? ஏன் அங்கு செல்ல வேண்டும்? என்றெல்லாம் கேள்வி தொடுத்தேன். ஆனால் நாம் இங்கு வந்து இவர்களின் செயற்பாடுகளைப் பார்த்த பொழுது தான் இதே போன்று நாமும் எமது தமிழ் நாட்டில் எமது ஜமாஅத்துல் உலமாவை இயக்க வேண்டும் என முடிவு செய்துள்ளேன். மட்டுமல்லாமல் எமது இந்த சந்திப்பானது வரலாற்றில் பதிவு செய்யப்பட வேண்டியது எனவும் குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிடுகையில்:

'உங்களுடைய இந்தத் சிலோன் ஜம்இய்யத்துல் உலமாவின் தலைவர் (ரிஸ்வி மு.ப்தி அவர்கள்) இந்த நாட்டுக்கு ஒரு சொத்து. அவருடைய பணிகள் இந்த மண்ணில் மட்டுமல்ல உலகம் முழுவதும் மெம்மேலும் வியாபிக்க நீங்களும் பிரார்த்தியுங்கள். நாமும் என்றும் பிரார்த்திக்கின்றோம் எனவும் குறிப்பிட்டார்.

இதனைத் தொடர்ந்த அ.இ.ஜ.உ வின் கௌரவத் தலைவர் அஷ்-ஷைக் எம்.ஐ.எம்.ரிஸ்வி முஃப்தி அவர்கள் உரையாற்றும் போது: 

'நிச்சயமாக உங்களுக்கு இங்கு காட்டப்பட்டதும், கூறப்பட்டதும் ஒரு எடுத்துக் காட்டுதான். நிச்சயமாக நீங்கள் எம்மிடம் வந்து படிக்க வேண்டிய எந்வொரு விடயமும் எம்மிடம் இல்லை. எமக்கு என்றும் வழிகாட்டிகள் இந்திய ஆலிம் பெருமக்கள் தான். காத்தான்குடிக்கு வந்த கண்ணியமிக்க அப்துல்லாஹ் ஹஸ்ரத் அவர்கள் கூட சுமார் 6 அல்லது 7 தசாப்தங்கள் எந்தவொரு உலக நோக்கமுமின்றி சன்மார்க்கப் பணிகள் புரிந்து வருவதும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும். எனவே முடியமான வரை எக்காரியத்தையும் தூய எண்ணத்தோடு நாம் செயற்படுத்தும் பொழுது எமக்கு நிச்சயம் வெற்றி கிடைக்கும். எனவே நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் சரி ஒரு தொலைபேசி அழைப்பைத் தாருங்கள்! உங்களுடைய ஜம்இய்யாவின் முன்னேற்றத்திற்கான எவ்வித பணியையும் நாம் செய்யத் தயாராக இருக்கின்றோம் எனவும் குறிப்பிட்டார்.
ACJU Head Office - Colombo
Tamil Naadu Jamathul Ulama Head Office - Madurai 

Meeting at Head Office
Meeting at Akurana


No comments:

Post a Comment

Yes Welcom